GBU படத்துல பாட்டு போட்டதுக்காக 5 கோடி கேக்குறீங்க.. இனி போன்ல ரிங்டோன் வச்சாலும் காசு கேப்பீங்களா ராஜா சார், ட்ரெண்டிங் மீம்ஸ்

Memes: அஜித்தின் குட் பேட் அக்லி வெளியாகி சக்கை போடு போட்டு வருகிறது. படத்தை ரிப்பீட் மோடில் பார்த்து கொண்டாடும் ரசிகர்களும் இருக்கின்றனர்.

இதற்கு முக்கிய காரணம் படத்தில் பயன்படுத்தப்பட்ட பழைய பாடல்கள் தான். 2k கிட்ஸ் கூட அந்த பாடல்களுக்கு வைப் செய்து வருகின்றனர்.

இது ஒரு புறம் இருக்க என் பாட்டை போட்டீங்கல்ல எடு ராயல்டிய என 5 கோடி கேட்டு நோட்டீஸ் விட்டு இருக்கிறார் இளையராஜா.

இது எதிர்பார்த்தது தான். என்ன படம் ஹிட் ஆயிடுச்சு இன்னும் இளையராஜாவை காணும் என நினைத்தோம் கரெக்ட்டா இசைஞானி வந்துட்டாரு என இணையவாசிகள் இதை கிண்டல் அடித்து வருகின்றனர்.

அதேபோல் ஆட்டத்தை ஆரம்பித்த இசைஞானி என செய்திகள் பரவி வருகிறது. மேலும் இளையராஜா பிரச்சினை பண்ணுவாருன்னு தெரிஞ்சே பாட்ட வச்சிருக்கீங்க.

ஆனால் விஜய் தான் இதுக்கு காரணம்னு உருட்டிகிட்டு இருக்கீங்க. என்னங்கடா உங்க நியாயம் ஒரு வேளை நம்ம போன்ல ரிங்டோன் வச்சா கூட இவரு காசு கேட்பாரோ.

இப்படியாக ஏகப்பட்ட மீம்ஸ் வைரலாகி வருகிறது. அதில் நம்மை பார்த்ததும் ரசிக்க வைத்த சில மீம்ஸ் தொகுப்பு இதோ.