ஸ்ரீக்கு இப்படி ஒரு பிரச்சனையா.? நண்பர் சொன்ன அதிர்ச்சி தகவல்

Shri : மாநகரம் படத்தின் மூலம் கவனம் ஈர்த்த ஸ்ரீயின் தற்போதைய நிலை பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. மிகவும் திறமை வாய்ந்த நடிகர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு மோசமான நிலையில் இருப்பது வேதனை அளித்து வருகிறது.

ஸ்ரீயின் இந்த நிலைமைக்கு என்ன காரணம் என்று பல தகவல்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. இது குறித்து ஸ்ரீயின் பெண் தோழி ஒருவர் பேட்டி கொடுத்திருக்கிறார். அதாவது அவரை போன் வாயிலாக பலமுறை நாங்கள் அழைத்திருக்கிறோம்.

ஆனால் எங்களின் அழைப்பை ஏற்க அவர் மறுத்துவிட்டார். மேலும் அவர் இன்ஸ்டாவில் போடும் ரீல்ஸுக்கு கீழேயும் நான் கமெண்ட் செய்து வருகிறேன். என்னுடைய பிரச்சினைகளை தினமும் அதில் நான் சொல்லுவேன். இதைப் பார்த்து ஏதாவது ரிப்ளை பண்ணுவார் என்று எதிர்பார்த்தேன்.

ஸ்ரீக்கு உள்ள பிரச்சனை பற்றி கூறிய அவரது நண்பர்

மேலும் அவர் காதுகளில் யாரோ வேறொருவர் குரல் பேசுவதாக தொடர்ந்து கேட்டுக் கொண்டிருப்பதாக கூறியிருந்தார். இதற்கு ஸ்கிசோஃப்ரினியா என்று பெயர். இது ஒரு அரிய வகை பாதிப்பு.

அதுமட்டுமல்லாமல் ஸ்ரீ நடித்த வில் அம்பு படத்திற்கும் அவருக்கு சம்பளம் கொடுக்கவில்லை என்று கூறியுள்ளாராம். இப்போது அவர் இருக்கும் இடத்தை நாங்கள் குரோன் மூலம் கண்டுபிடித்து விட்டோம் என்று அவரது நண்பர் கூறியிருக்கிறார்.

மேலும் மிக விரைவில் ஸ்ரீயை கண்டுபிடித்து அவருக்கு சரியான சிகிச்சை அளிப்போம். மீண்டும் பழையபடி அவரை மீட்டு கொண்டு வருவோம் என்று நம்பிக்கையுடன் பேசி இருக்கிறார் ஸ்ரீ நண்பர்.