Ayyanar Thunai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற அய்யனார் துணை சீரியலில், நிலாவின் குடும்பத்தில் இருப்பவர்கள் நம்ப வைத்து ஏமாற்றியதால் கவலையில் இருக்கும் நிலாவிற்கு பல்லவன் மற்றும் சோழன் ஆறுதல் சொல்லி வீட்டிற்கு கூட்டிட்டு வருகிறார்கள். வீட்டிற்கு வந்ததும் சேரனிடம் வீட்டில் நடந்த விஷயத்தை சொல்லி நிலா அழ ஆரம்பித்து விடுகிறார். அதற்கு சேரன், எதை நினைத்தும் கவலைப்படாமல் இந்த வீட்டில் சந்தோஷமாக இருங்க.
நீங்க என்னெல்லாம் ஆசைப்படுகிறீர்களோ அதை எல்லாம் இந்த வீட்டில் இருந்து பண்ணலாம் என்று சொல்லி ஆறுதல் படுத்துகிறார். அத்துடன் சோழனும் உங்களுக்கு சர்டிபிகேட் தான் பிரச்சனை என்றால் நான் அதை வாங்கி தந்து விடுகிறேன். சர்டிபிகேட் கிடைத்ததும் நீங்கள் ஆசைப்பட்ட மாதிரி வேலையை செய்து உங்களுடைய கனவை நிறைவேற்றலாம் என்று சமாதானப்படுத்தி விட்டார்.
அடுத்ததாக வழக்கம்போல் காலையில் சேரன் எல்லாருக்கும் சமைத்துக் கொண்டிருக்கும் பொழுது நிலா அங்கே வந்து எப்பொழுதும் நீங்க மட்டும் தனியாக ஏன் கஷ்டப்பட வேண்டும். இது ஒன்றும் ஹாஸ்டல் கிடையாது எல்லாத்துக்கும் நீங்கள் சமைத்து கொடுப்பதற்கு. உங்க தம்பிகளும் எழுந்திருந்து உதவி செய்தால்தான் நன்றாக இருக்கும் என்று சொல்லி அவர்களை எழுப்புவதற்கு முயற்சி எடுத்தார்.
அந்த வகையில் நிலா செய்த சின்ன சின்ன விஷயங்களை பார்த்த சேரனின் தம்பிகள் அனைவரும் எழுந்து அவருடைய வேலைகளை அவர்களே பண்ண ஆரம்பித்து விட்டார்கள். இப்படி அந்த வீட்டில் சில விஷயங்களை மாற்றி வரும் நிலா அடுத்து மாமனாரையும் கொஞ்சம் மாற்றலாம் என்று களத்தில் இறங்கினார். அதனால் எப்பொழுதும் சிகரெட் குடித்துக் கொண்டிருக்கும் நடேசனுக்கு அறிவுரை நிலா கூறினார்.
ஆனால் நடேசன் நிலா சொன்ன அட்வைஸுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக திட்டி விட்டு போய் விடுகிறார். ஆனாலும் நிலா இதை இப்படியே விட்டு விட மாட்டார் கொஞ்சம் கொஞ்சமாக அந்த குடும்பத்தில் இருப்பவர்களையும் குடும்பத்தையும் மாற்றி விடுவார்.
அந்த வகையில் நிலாவுக்கு பக்க பலமாக அந்த வீட்டிற்குள் இரண்டாவது மருமகளாக கார்த்திகா கூடிய சீக்கிரத்தில் நுழையப் போகிறார். ஏற்கனவே சேரன் மீது ஆசைப்பட்டிருக்கும் கார்த்திகா, அம்மாவின் டார்ச்சரை தாங்க முடியாமல் சேரனை கட்டிக்கொண்டு அந்த வீட்டிற்கு நிலாவின் உதவியுடன் வந்து விடுவார்.