மீண்டும் சர்ச்சையில் சிக்கிய நீயா நானா.? பா ரஞ்சித் காட்டம்

Pa Ranjith : விஜய் டிவியில் பல வருடங்களாக வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிகழ்ச்சி தான் நீயா நானா. இதை கோபிநாத் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த சூழலில் சமீபத்தில் மும்மொழி கொள்கை பற்றி விவாதம் நடத்தப்பட்டுள்ளது.

இதற்கான ப்ரோமோவும் வெளியான நிலையில் சில அரசியல் அழுத்தம் காரணமாக இந்த எபிசோடு வெளியாகாமல் போனது. ஏன் இதை ஒளிபரப்பு செய்யவில்லை என்று பலரும் கேள்வி எழுப்பி வந்தனர்.

இதைத் தொடர்ந்து சமீபத்தில் திரைப்பட நட்சத்திரங்கள் நீயா நானா நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அதில் பேசிய ஒருவர் இல்லாத ஜாதி பிரச்சனையை பல திரைப்பட நடிகர்களை சினிமாவில் காட்டி வருவதாக கூறியிருந்தார்.

நீயா நானா நிகழ்ச்சியை விமர்சனம் செய்த பா ரஞ்சித்

மேலும் மக்களை தவறாக வழி நடத்துகிறார்கள் என்றும் குற்றம் சுமத்தி இருந்தார். இதற்கு பா ரஞ்சித் சமீபத்திய நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும்போது கடுமையாக காட்டம் காட்டியுள்ளார்‌. அதாவது நீயா நானா நிகழ்ச்சியில் பங்கு பெற்ற ஒருவர் தமிழ் சினிமாவில் நசுக்கப்பட்டோம், அமுக்கப்பட்டும், பிதுக்கப்பட்டும் என்று கூறியிருக்கிறார்.

கடந்த ஆறு வருடமாக தான் நாங்கள் சினிமாவில் படம் எடுத்து வருகிறோம். மேலும் மோசமான வார்த்தைகளை பயன்படுத்தி அவர் பேசுகையில் நீயா நானா நிகழ்ச்சி அதை அப்படியே ஒளிபரப்பு செய்திருக்கிறது. அதை எடிட் செய்ய வேண்டும் என்ற குறைந்தபட்ச அக்கறை கூட அவர்களுக்கு இல்லை.

நாங்கள் மட்டும் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக படங்கள் எடுக்கவில்லை என்றால் இவர்கள் எல்லாம் புரட்சியாளர்களாக போல சித்தரிக்கப்படுவார்கள். உங்களை நாங்கள் தான் வாழ வைத்தோம், உணவளித்தோம் என்று தொடர்ந்து சொல்லிக்கொண்டே இருப்பார்கள்.

எங்களுக்கு எதுவும் சும்மா கிடைக்கவில்லை என்பதை வெளிப்படையாக சொல்வதுதான் இங்கு பிரச்சனை என பா ரஞ்சித் கடுமையாக சாடியிருக்கிறார்.