இந்த இளையராஜா பஞ்சாயத்தை பார்ப்பதற்காகவே நிறைய கோர்ட்டுகள் புதிதாய் அமைக்க வேண்டும் போல். சமீபத்தில் இளையராஜா பண்ணிய பிரச்சனைதான் எல்லா பக்கமும் பேசுபொருளாக மாறிக்கொண்டிருக்கிறது. தற்சமயம் அஜித் நடிப்பில் வெளிவந்த குட் பேட் அக்லி படத்தை வைத்து தான் இளையராஜா ஆர்ப்பாட்டம் செய்து வருகிறார். ஏற்கனவே சாமி பிரச்சனை செய்த நான்கு படங்கள்.
கூலி: ரஜினியை வைத்து லோகேஷ் கனகராஜ் இந்த படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். இந்த படத்தின் டைட்டில் டீசர் வெளி வந்தது. அதில் இளையராஜா இசையமைத்த “தங்க மகன்” படத்தில் உள்ள “வா வா பக்கம் வா” பாடலை பயன்படுத்தியதாக லோகேஷ் மீது கேஸ் கொடுத்தார்.
மஞ்சுமேல் பாய்ஸ்: 100 கோடி வசூலை செய்தது இந்த படம். இந்த படத்தில் இளையராஜா குணா படத்தில் இசையமைத்த “கண்மணி அன்போடு காதலன்” பாடலை பயன்படுத்தியதற்காக இளையராஜா பிரச்சினையை செய்து 60 லட்சம் நஷ்ட ஈடு வாங்கியதற்குப் பின் சற்று ஓய்ந்தார்.
குட் பேட் அக்லி: ஒத்த ரூபாய் தாரேன், இளமை இதோ, என் ஜோடி மஞ்ச குருவி போன்ற பாடல்களை தன்னுடைய அனுமதி இல்லாமல் படத்தில் பயன்படுத்தி விட்டனர் என இப்பொழுது பட நிர்வாகத்திற்கு எதிராக 5 கோடிகள் கேட்டு கேஸ் கொடுத்துள்ளார். ஆனால் அவர்கள் அந்தந்த படத்தின் தயாரிப்பாளர்களிடம் அனுமதி வாங்கி உள்ளனர்.
கப்பல்: 2015ஆம் ஆண்டு சங்கர் தயாரிப்பில் வெளிவந்த கப்பல் படத்தில் தன்னுடைய பாடலை பயன்படுத்தியதாக கேஸ் கொடுத்தார். தன்னுடைய எவர்கிரீன் கரகாட்டக்காரன் படத்தின் பாடலான “ஊரு விட்டு ஊரு வந்து” பாடலை பயன்படுத்தி விட்டனர் என நஷ்ட ஈடு வாங்கினார்
எஸ்பிபி- கோவிந்த் வசந்தா: இளையராஜாவின் நெருங்கிய நண்பர் எஸ்பிபி. இருவரும் சேர்ந்து பல சூப்பர் ஹிட் பாடல்களை ஒன்றாக அமைத்திருந்தனர். ஆனால் எஸ்பிபி தன் பாடலை பொது இடத்தில் பாடுவதற்கு சண்டை போட்டார் இளையராஜா. அது மட்டும் இன்றி 96 படத்தின் மியூசிக் டைரக்டர் கோவிந்த் வசந்தா உடனும் தன்னுடைய பாடல்களை பயன்படுத்தியதற்கு கலேபரம் செய்தார்.