OTT Movies : சமீபகாலமாக பெரிய நடிகரின் எல்லா படங்களுமே திரையரங்கு வெளியீட்டுக்கு பிறகு ஓடிடியில் ஒளிபரப்பாகிறது. அவ்வாறு அதிக விலைக்கு விற்கப்பட்ட 6 தமிழ் படங்களை பார்க்கலாம்.
அஜித் நடிப்பில் வெளியான குட் பேட் அக்லி படத்தை நெட்பிளிக்ஸ் நிறுவனம் வாங்கியது. மொத்தமாக இந்த படத்தை 85 கோடி கொடுத்த வாங்கி இருந்தது. படம் வெளியான ஒரு வாரத்திற்குள்ளேயே தியேட்டரில் 100 கோடி வசூலை தாண்டி இருக்கிறது.
ஐந்தாவது இடத்தில் நெல்சன் மற்றும் ரஜினி கூட்டணியில் உருவான ஜெயிலர் படம் தான் இருக்கிறது. இந்த படத்தை அமேசான் பிரைம் ஓடிடி தளம் 90 கோடி கொடுத்து வாங்கி இருந்தது. ஜெயிலர் படமும் தியேட்டரில் நல்ல லாபத்தை கொடுத்திருந்தது.
ஓடிடியில் அதிக விலைக்கு விற்கப்பட்ட 6 தமிழ் படங்கள்
அடுத்ததாக விஜய்யின் கோட் படம் நான்காவது இடத்தில் இருக்கிறது. வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் இரட்டை வேடத்தில் இந்த படத்தில் நடித்திருந்தார். 108 கோடி கொடுத்துஉ நெட்பிளிக்ஸ் கோட் படத்தை வாங்கி இருந்தது.
மூன்றாவது இடத்தையும் விஜய்யின் படம் தான் பிடித்திருக்கிறது. 2026 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனநாயகன் படம் வெளியாக உள்ளது. இந்த படத்தை 105 கோடி கொடுத்து நெட்பிளிக்ஸ் கைப்பற்றி இருக்கிறது.
இரண்டாவது இடத்தை மணிரத்னம் இயக்கத்தில் கமல், சிம்பு நடிப்பில் உருவாகி இருக்கும் தக் லைஃப் பிடித்திருக்கிறது. 145 கோடி கொடுத்து நெட்பிளிக்ஸ் தான் தக் லைஃப் படத்தையும் வாங்கி இருக்கிறது.
மணிரத்னம் தான் முதலிடத்தையும் தக்க வைத்துள்ளார். அவரின் பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் அமேசான் ப்ரைம் ஓடிடி தளம் 155 கோடி கொடுத்து வாங்கி இருக்கிறது.