Priyanka Deshpande : விஜய் டிவியில் இருக்கும் தொகுப்பாளினிகள் திருமணம் செய்து கொண்ட சில வருடங்களிலேயே விவாகரத்து செய்யும் செய்தி அடிக்கடி வெளியாகி இருக்கிறது.
காதும் காதும் வைத்தபடி திருமணத்தை முடித்த பிரியங்கா

அவ்வாறு தான் பிரியங்கா பிரவீன் குமார் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பிரவீனும் விஜய் டிவியில் பணியாற்றியவர் தான்.
வசியுடன் விஜய் டிவி பிரியங்கா

இந்நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு பிரியங்கா பிரவீனை விவாகரத்து செய்து விட்டதாக தகவல் வெளியானது. ஆனால் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரவில்லை.
வாழ்த்து மழையில் பிரியங்கா

மேலும் பிரியங்கா யூடியூப் மற்றும் சமூக வலைத்தளங்களில் தனது கணவனின் புகைப்படங்களை வெளியிடுவதில்லை. இந்த சூழலில் இன்று திடீரென தனது உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில் பிரியங்காவுக்கு இரண்டாவது திருமணம் நடந்திருக்கிறது.
உறவுகள் சூழ பிரியங்காவின் திருமணம்

அவரை திருமணம் செய்து கொண்டவரின் பெயர் வசி என்று கூறப்படுகிறது. அவரைப் பற்றிய முழு விவரம் தற்போது தெரியவில்லை.
இப்போது பிரியங்காவின் ரசிகர்கள் இந்த வாழ்க்கை அவருக்கு நல்லபடியாக அமைய வேண்டும் என்று வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள்.