சீரியலை டேமேஜ் பண்ணி வரும் சன் டிவியின் இரண்டு சீரியல்கள்.. 1000 எபிசோடுகள் தாண்டியும் தடுமாறும் சீரியல்

Sun Tv Serial: சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சீரியலுக்கு மக்கள் தொடர்ந்து ஆதரவு கொடுத்து வருகிறார்கள். முக்கியமாக சன் டிவி சீரியல்களை அதிகமான பேர் விரும்பி பார்க்கிறார்கள். அந்த வகையில் ஒரு சீரியல் முடிவுக்கு வரும் முன்னே அதற்கு பதிலாக நான்கு சீரியல்களை தயார் செய்து வைத்திருப்பார்கள். ஆனால் சில சீரியல்கள் பிரேம் டைமில் ஒளிபரப்பாகி வந்தாலும் கதை சரியாக அமையாததால் நெகட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது.

அத்துடன் அந்த சீரியல்களை முடிங்க என்று கமெண்ட்ஸ்களும் வருவதால் அதை கண்டு கொள்ளாமல் சன் டிவி சீரியல்கள் தொடர்ந்து ஒளிபரப்பு செய்வதால் சீரியலின் பெயரை டேமேஜ் ஆகிவிட்டது. இதில் முதலாவதாக இருப்பது ஆயிரம் எபிசோடுகள் தாண்டி வரும் கயல் சீரியல்தான். ஒரு குடும்பம் என்றால் பிரச்சனை இருக்கத்தான் செய்யும். ஆனால் கயல் சீரியலைப் பொறுத்தவரை பிரச்சினை தான் குடும்பம் என்பதற்கு ஏற்ப தான் ஒவ்வொரு பிரச்சனையாக வந்து கொண்டே இருக்கிறது.

அந்த வகையில் ஏகப்பட்ட பிரச்சனைக்கு நடுவில் தற்போது எழிலின் வளர்ச்சியும் அமைந்திருக்கிறது. எழிலுக்கு நல்லபடியாக ஒரு பிசினஸை அமைத்துக் கொடுக்க வேண்டும் என்று போராடும் கயலின் குடும்பம் யாரிடமும் கையேந்தாமல் அமைய வேண்டும் என்று நினைக்கிறார்கள். வேலு மூலம் மூர்த்தி கொண்டு வந்த பணத்தையும் கயல் வாங்க மறுத்துவிட்டார்.

ஆனால் வீட்டில் இருப்பவர்களிடம் வாங்க முடியாத கயல் சம்பளத்திற்காக வீட்டு வேலை பார்ப்பதற்கு தயாராகி விட்டார். இது என்னடா கயலுக்கு வந்த சோதனை என்பதற்கு ஏற்ப தான் காட்சிகள் ஒவ்வொன்றும் அமைந்து வருகிறது. இதற்கு பேசாமல் இந்த கதையை முடித்துவிட்டு புதுசாக ஒரு நாடகத்தை கொண்டு வாங்க என்று மக்கள் விமர்சனம் செய்து வருகிறார்கள்.

அடுத்ததாக வீட்டில் அடிமையாக இருக்கும் பெண்கள் எதிர்நீச்சல் போட்டு வாடிவாசலை தாண்டி முன்னேறி வருவார்கள் என்று வழி மீது விழி வைத்து காத்துக் கொண்டிருக்கும் மக்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றமாக எதிர்நீச்சல் தொடர்கதை சீரியலின் கதை இருக்கிறது. குணசேகரன் போட்ட பிளான் படி நான்கு பெண்களும் சிக்கி அந்த வீட்டில் வேலை பார்க்கும் வேலைக்காரிகளாக தான் மாறி வருகிறார்கள்.

குணசேகரன் வீட்டை விட்டு போனால்தான் அந்த பெண்களுக்கு விமோசனம் என்று எதிர்பார்த்த நிலையில் அவர்களும் வீட்டை விட்டு போயி எதுவும் பண்ண முடியாமல் மறுபடியும் அதை வீட்டிற்கு வந்து தற்போது அடிமையாக வாழ்ந்து வருகிறார்கள். ஆனாலும் குணசேகரன் போட்ட திட்டத்தை தெரிந்து கொண்ட பெண்கள் அவர் வழியிலேயே போயி பதிலடி கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள்.

ஆனால் கடைசிவரை பெண்கள் மட்டும் ஜெயித்த பாடாக இல்லை. அந்த வகையில் இந்த இரண்டு சீரியல்களுமே தற்போது கதையே டேமேஜ் பண்ணும் அளவிற்கு தான் காட்சிகள் அமைந்து வருகிறது. இதற்கு பேசாமல் இந்த இரண்டு சீரியலையும் தூக்கி விட்டு வரிசையில் நிற்கும் பராசக்தி, சாந்தி நிலையம், பூவே செம்பூவே போன்ற புத்தம் புது சீரியல்களை கொண்டு வரலாம் என்று மக்கள் எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.