சகலையுடன் மீண்டும் வம்பு இழுக்கும் முத்து.. மீனா விட்ட சவாலை நிறைவேற்ற போகும் சிந்தாமணியின் வீட்டுக்காரர்

Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், சிட்டியிடம் இருந்து சத்யாவை முத்து காப்பாற்றினாலும் அதற்கு ஒரு விதத்தில் சப்போர்ட் செய்தது டிராபிக் போலீஸ் அருண் தான். அதனால் தன்னுடைய அம்மாவை கூட்டிட்டு அருண் வீட்டிற்கு நன்றி சொல்வதற்காக மீனாவின் தங்கை சீதா போயிருக்கிறார். போன இடத்தில் அருண் அம்மாவும் சீதாவின் அம்மாவும் பேசி பழகிய நிலையில் அருண், சீதாவை தனியாக கூப்பிட்டு நம்மளுடைய காதல் விவாகரத்தை சொல்லி சம்மதம் கேட்கவா என்று கேட்கிறார்.

அதற்கு சீதா அம்மா மட்டும் இல்லை என்னுடைய மாமாவும் சம்மதம் தெரிவிக்க வேண்டும். ஏனென்றால் அவர்தான் எங்களுடைய அப்பா ஸ்தானத்தில் இருந்து எல்லா கடமைகளையும் செய்து வருகிறார். அதனால் கொஞ்சம் காத்திருக்க வேண்டும் மாமாவிடம் நான் எடுத்துச் சொல்லி சம்மதத்தை வாங்கிய பிறகு அம்மாவிடம் சொல்லலாம் என்று அருணிடம் சொல்லிவிட்டு வீட்டை விட்டு கிளம்பி விடுகிறார்.

ஆனாலும் சீதா மீது அவங்க அம்மாவுக்கு சந்தேகம் வந்ததால் அவர் உன்னுடைய நண்பர் என்பதற்காக உதவி செய்தாரா, இல்லை வேறு ஏதாவது காரணமா என்று கேட்கிறார். இதற்கு சீதா உண்மையை சொல்ல முடியாமல் சமாளித்து விடுகிறார். அடுத்ததாக ஒரு டெக்ரேசன் ஆர்டரை எடுப்பதற்காக மீனா கல்யாண மண்டபத்திற்கு போகிறார். அதே ஆர்டரை வாங்குவதற்காக சிந்தாமணியும் வந்திருக்கிறார்.

அந்த மண்டபத்தின் கண்டிஷன் என்னவென்றால் யாரு அட்வான்ஸ் தொகையாக முதலில் 2 லட்ச ரூபாய் பணம் கெட்டுகிறார்களோ, அவர்களுக்கு தான் இந்த ஆர்டர் கிடைக்கும் என்று சொல்லிவிடுகிறார். ஆனால் சிந்தாமணி இது என்ன புதுசாக இருக்கிறது எனக்கு இந்த மாதிரி பழக்கம் எல்லாம் இல்லை என்று வாதாடுகிறார். அதே நேரத்தில் மீனா இன்னும் இரண்டு நாள் டைம் இருக்கிறது. அதற்குள் நான் பணத்தை ஏற்பாடு பண்ணுகிறேன் என்று சொல்கிறார்.

உடனே சிந்தாமணி, மீனாவை அவமானப்படுத்தும் விதமாக உன்னால் முடியாது என்று சொல்கிறார். ஆனால் மீனா சிந்தாமணி இடம் சவால் விட்டு நான் இந்த ஆர்டரை கைப்பற்றி ஜெய்த்து காட்டுவேன் என்று சொல்லி போய் விடுகிறார். பிறகு வீட்டிற்கு வந்ததும் முத்துமிடம் நடந்து உண்மையை சொல்கிறார். உடனே முத்து அப்பாவிடம் உதவி கேட்கலாம் என்று அண்ணாமலையிடம் பேசுகிறார். ஆனால் வழக்கம் போல் விஜயா அதை கெடுத்து விடுகிறார்.

அந்த வகையில் மீனா இந்த ஆர்டரை கைப்பற்றுவதற்கு சிந்தாமணியின் கணவர் வட்டிக்கு ஏற்கனவே மீனாவுக்கு பணத்தை கொடுத்து உதவி பண்ணி இருக்கிறார். அதனால் மீண்டும் அவர் தான் மீனா, சிந்தாமணி இடம் விட்ட சவாலை ஜெயிப்பதற்காக உதவி செய்து மீனாவை ஜெயிக்க வைப்பார். அடுத்ததாக முத்து காரில் போய்க்கொண்டிருக்கும் போது அங்கே டிராபிக் போலீஸ் அருண்,காரை நிப்பாட்டி முத்துவிடம் குடித்து இருக்கிறியா என்று கேள்வி கேட்கிறார்.

அதற்கு முத்து நான் குடிக்கவில்லை என்று சொல்லிய நிலையில் அருண் ஊத சொல்லி கேட்கிறார். ஆனால் முத்து நான் எதற்கு ஊதணும் என்னால் முடியாது என்று டிராபிக் போலீஸ் அருனிடம் மறுபடியும் வம்பு இழுக்கிறார். இவர்தான் தன்னுடைய சகலை என்று தெரியாமல் முத்து மற்றும் அருண் அடிக்கடி மோதிக் கொள்கிறார்கள். இவர்களை சமாளித்து எப்படி சீதா அவருடைய காதலில் ஜெயிக்கப் போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.