இதுக்கு மேலயும் காக்க வைக்க மாட்டோம்.. வாடிவாசல் ரிலீஸ் எப்போது.? முழு அப்டேட் கொடுத்த தயாரிப்பாளர்

Vaadivaasal Update: வெற்றிமாறன், சூர்யா கூட்டணியில் வாடிவாசல் எப்போதோ அறிவிக்கப்பட்டது. ஆனால் அதை அடுத்து இருவரும் வெவ்வேறு படங்களில் பிஸியாகி விட்டனர்.

இதனால் படம் தொடங்குமா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் இருந்தது. அதேபோல் அமீர் மற்றும் சூர்யா குடும்ப பிரச்சனையும் விஸ்வரூபம் எடுத்தது.

இதனால் சூர்யா இப்படத்தில் நடிக்க மாட்டார் என ரசிகர்கள் முடிவு செய்தனர். ஆனால் இந்த கணிப்புகளை பொய்யாக்கும் வகையில் படம் விரைவில் தொடங்கும் என தயாரிப்பாளர் தாணு தெரிவித்தார்.

வாடிவாசல் ரிலீஸ் எப்போது.?

அது மட்டும் இன்றி சூர்யாவை அவர் வீட்டில் வெற்றிமாறனுடன் சந்தித்த போட்டோவையும் பகிர்ந்திருந்தார். மேலும் ஜிவி பிரகாஷ் கூட வாடிவாசல் பட இசை அமைக்கும் பணி தொடங்கி விட்டது என ஒரு அப்டேட் கொடுத்தார்.

இந்நிலையில் மீண்டும் தயாரிப்பாளர் தாணு பட ரிலீஸ் பற்றிய அப்டேட் கொடுத்துள்ளார். அதில் ஏற்கனவே படத்தின் ஒரு பாடல் எழுதி ரெக்கார்ட் செய்து விட்டோம்.

இனிமேல் ஷூட்டிங் ஆரம்பிப்பது தான் பாக்கி. அதுவும் விரைவில் ஆரம்பிக்கப் போகிறது. இனிமேல் ரசிகர்களை காக்க வைக்க மாட்டோம்.

படப்பிடிப்பு முடிந்து அடுத்த மே அல்லது ஜூன் மாதத்தில் படத்தை ரிலீஸ் செய்து விடுவோம் என தயாரிப்பாளர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இதனால் சூர்யாவின் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

பல வருட கனவு நிறைவேற போகிறது. நிச்சயம் இப்படம் சூர்யாவின் கெரியரில் பெயர் சொல்லும் படமாக இருக்கும் என இப்போதே வாழ்த்தி வருகின்றனர்.