Ethirneechal 2 Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் 2 சீரியலில், குணசேகரன் மீண்டும் ராஜாங்கம் பண்ண வேண்டும் பெண்களை ஆட்டிப் படைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் விசாலாட்சிக்கு மறைமுகமாக விஷம் கொடுத்து வீட்டை விட்டுப் போன நான்கு மருமகள்களையும் திரும்ப வீட்டிற்கு வர வைத்து விட்டார். வந்த மருமகள் பழைய மாதிரி அடுப்பாங்கரையில் வேலை பார்த்து அடிமையாக இருக்க வேண்டும் என்பதற்காக குணசேகரன் பக்காவாக காய் நகர்த்தி வருகிறார்.
இதற்கு கூட்டுக் களவாணியாக விசாலாட்சியும் மருமகளை ஆட்டி படைக்கிறார். அந்த வகையில் வீட்டிற்கு கரிகாலன் மூலம் விருந்தாளியே வரவைத்து அவர்களுக்கு சமைத்து போடவும் எச்சில் இலையை எடுக்கும் வேலைக்காரியாகவும் அத்துடன் துணியை துவைத்துக் கொடுக்கும் வேலைகளை தொடர்ந்து கொடுத்து அவர்கள் வேறு எந்த விதத்திலும் முன்னேற விடக்கூடாது என்பதற்காக குணசேகரன் பிளான் படி செய்து விட்டார்.
ஆனால் குணசேகரன் இதெல்லாம் பிளான் பண்ணி தான் பண்ணுகிறார் என்று உணர்ந்த ஜனனி அவருக்கு ஸ்வீட் சர்ப்ரைஸ் கொடுக்க வேண்டும் என்று அவர் வழியிலேயே போய் நம்மளுடைய ட்ராமாவை நடத்த வேண்டும் என பிளான் பண்ணி விட்டார். அதனால் தான் குணசேகரன் செய்யும் தில்லாலங்கடி வேலையை மறைமுகமாக ஜனனி மொபைல் மூலம் வீடியோ எடுத்துவிட்டார்.
அத்துடன் குணசேகரனுக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்பதற்காக ஜனனி செய்த சின்ன டிராமா தான் காலில் பூந்தொட்டி விழுந்தது. இனி இதன் மூலம் மற்ற மருமகள் சேர்ந்து குணசேகனுக்கு திருப்பி பதிலடி கொடுக்கப் போகிறார்கள். குணசேகரன் வீட்டில் இருந்து கொண்டே அவருடைய கண்ணில் விரலை விட்டு ஆட்டும் அளவிற்கு இனி மருமகள்களின் ராஜ்ஜியம் நடக்கப் போகிறது.