Vels Films : லைக்கா போன்ற பெரிய நிறுவனங்கள் தொடர் தோல்வி காரணமாக பெரும் நஷ்டத்தை அடைந்திருக்கிறது. இதனால் அவர்கள் படம் தயாரிப்பது குறைந்து கொண்டே இருக்கிறது. ஆனால் ஐசாரி கணேஷின் வேல்ஸ் ஃபிலிம்ஸ் இப்போது வளர்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.
அந்த வகையில் இந்த வருடம் மூன்று படங்களை கைவசம் வைத்திருக்கிறது. சுந்தர் சி இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் உருவாகும் மூக்குத்தி அம்மன் 2 படத்தை ஐசாரி கணேஷ் தயாரிக்கிறார். படத்தின் பூஜையே ஒரு கோடி செலவில் நடத்தப்பட்டது.
இந்த படத்தின் பட்ஜெட் மட்டும் கிட்டத்தட்ட 110 கோடி. அடுத்ததாக தனுஷின் படத்தை இந்நிறுவனம் எடுக்க உள்ளது. போர் தொழில் படத்தை எடுத்து வெற்றி கண்ட விக்னேஷ் ராஜா அடுத்ததாக தனுஷின் படத்தை இயக்க உள்ளார்.
பல கோடி பட்ஜெட்டில் மூன்று படங்களை தயாரிக்கும் வேல்ஸ் ஃபிலிம்ஸ்
இப்படமும் வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனத்தின் பிரம்மாண்ட பட்ஜெட் தான். கிட்டத்தட்ட 120 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்படுகிறது. அடுத்ததாக விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான கட்டா குஸ்தி படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இரண்டாம் பாகம் எடுக்கப்படுகிறது.
இதே காம்போவை வைத்து இரண்டாம் பாகத்தை 40 கோடி பட்ஜெட்டில் ஐசாரி கணேஷ் எடுக்க இருக்கிறார். இவ்வாறு மூன்று படங்களில் கிட்டத்தட்ட 250 கோடிக்கு அதிகமாக வேல்ஸ் ஃபிலிம்ஸ் முதலீடு செய்ய இருக்கிறது.
மேலும் இந்த மூன்று படங்களுக்குமே எதிர்பார்ப்பு அதிகமாக இருப்பதால் கண்டிப்பாக பல மடங்க லாபத்தை கொடுக்கும். குறிப்பாக மூக்குத்தி அம்மன் 2 படம் மாபெரும் வெற்றி பெறும் என்ற நம்பிக்கையில் உள்ளனர்.