அய்யனார் துணை சீரியலில் நிலா மனசை கொஞ்சம் கொஞ்சமாக மாற்றும் சோழன்.. தம்பிக்காக பொய் சொல்லும் சேரன்

Ayyanar Thunai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற அய்யனார் துணை சீரியலில், சோழனை நம்பி நிலா சேரன் வீட்டுக்கு வந்திருந்தாலும் சோழனை விட சேரன் மற்றும் பல்லவன் தான் நிலாவுக்கு ரொம்பவே பக்க பலமாக இருக்கிறார்கள். அதிலும் நிலா மற்றும் பல்லவனின் புரிதல் பார்க்கவே நன்றாக இருக்கிறது. இவர்கள் இருவரும் கோவிலுக்கு போய்க்கொண்டிருக்கும் பொழுது அங்கே கார்த்திகாவும் வருகிறார்.

கார்த்திகா வாய திறந்தாலே சேரனை பற்றி தான் புலம்பி தவிக்கிறார். இதனால் நிலாவுக்கு கார்த்திகா மனதில் சேரன் இருக்கிறார் என்பது புரிந்து விட்டது. உடனே பல்லவனிடம் உங்க அண்ணன் சேரனுக்கு கார்த்திகாவை கல்யாணம் பண்ணி வைக்கலாமே என்று சொல்கிறார். அதற்கு பல்லவன் அவங்க அம்மாவுக்கு நம்ம குடும்பத்தை கண்டாலே பிடிக்காது. இவங்களும் அவங்க அம்மா அடித்து விட்டால் வீட்டு பக்கமே கொஞ்சம் நாளைக்கு வர மாட்டாங்க.

அதனால் இவர்களை நம்பியெல்லாம் சேரன் அண்ணா கல்யாணம் பண்ண முடியாது என்று சொல்கிறார். அடுத்ததாக சோழன், நிலாவிடம் சேரன் ஒரு இன்ஜினியர் என்று சொல்லி வைத்திருந்தார். அதனால் நிலாவும் சேரனிடம் வேலை விஷயமாக உதவி கேட்டிருந்தார். ஆனால் சேரன் கொத்தனார் வேலை தான் பார்த்துக் கொண்டிருக்கிறார். இதனால் சேரன் மூலம் நிலவுக்கு உதவி கிடைக்காது என்று தெரிந்து கொண்ட சோழன் நண்பர் மூலம் நிலாவுக்கு ஒரு இன்டர்வியூ ஏற்பாடு பண்ணுகிறார்.

இந்த விஷயத்தை சர்ப்ரைஸாக சொல்ல வரும் பொழுது நிலாவுக்கு நைட்டியையும் எடுத்துட்டு வருகிறார். அப்பொழுது நிலாவிடம் உங்களுக்கு ஒரு பெரிய ஆபீஸில் இன்டர்வியூ இருக்கிறது. நிச்சயம் அந்த வேலை உங்களுக்கு கிடைத்துவிடும் அதுவும் சர்டிபிகேட் இல்லாமலேயே ஏற்பாடு பண்ணி இருக்கிறேன் என்று சொல்கிறார். இந்த விஷயத்தை கேள்விப்பட்டதும் நிலாவுக்கு ரொம்ப சந்தோஷம் வந்துவிட்டது.

அடுத்ததாக வாங்கிட்டு வந்த நைட்டியையும் கொடுக்கிறார். அதை பார்த்த நிலா எனக்கு நைட்டி போடுகிற பழக்கம் இல்லை என்று திருப்பிக் கொடுத்து விடுகிறார். அடுத்ததாக நிலாவுக்கு பிடித்த மாதிரி ஒரு டிரஸ் வாங்கிட்டு வந்து கிப்ட் பண்ணலாம் என வீட்டுக்குள் வைத்து இருக்கிறார். தமக்கு தான் தன்னுடைய பையன் வாங்கிட்டு வந்திருக்கிறான் என்று தவறாக புரிந்து கொண்ட நடேசன் அந்த ட்ரெஸ்ஸை போட்டுவிட்டு வீட்டில் இருப்பவர்களிடம் காமெடி பண்ணி வருகிறார்.