பாண்டியன் குடும்பத்தையே ஐஸ் வைத்து உருக்கிய அரசியின் வீட்டுக்காரர்.. பழனிவேலுவை டார்ச்சர் செய்யும் சுகன்யா

Pandian Stores 2 Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், பாண்டியன் வீட்டில் இருக்கும் பெண்கள் அனைவரும் அரசியை கூட்டிட்டு கோவிலுக்கு போய் விட்டார்கள். இன்னொரு பக்கம் கடையில் பாண்டியன் செந்தில் சரவணன் மற்றும் பழனிச்சாமி வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த நேரத்தில் கடைக்கு அரசிக்கு பார்த்திருக்கும் மாப்பிள்ளை சதீஷ் வருகிறார்.

வந்ததும் பாண்டியனிடம் பேசி முடித்துவிட்டு என்னுடைய அம்மா கார் கேட்டது எனக்கு பிடிக்கவில்லை. வரதட்சணையாக எந்த ஒரு பொருளும் வாங்கக்கூடாது என்று நினைக்கக்கூடிய ஆளு நானு. ஆனால் இதை பற்றி என்னுடைய அம்மாவிடம் பேசிய பொழுது அவங்க தேவை இல்லாமல் நிறைய காரணங்கள் சொல்கிறார்கள். அதனால் அவர்களை மாற்ற முடியாது, அதனால் தான் அது விஷயமாக உங்களை பார்த்து பேச வந்தேன் என்று சதீஷ், பாண்டியனிடம் சொல்கிறார்.

பாண்டியன் என்ன என்று கேட்கும் பொழுது நான் பணம் சம்பாதித்து வைத்திருக்கிறேன். அதில் கார் வாங்க வேண்டும் என்று தான் எனக்கு ஆசை அதனால் அந்த பணத்தை உங்களிடம் தருகிறேன். அதை வைத்து நீங்கள் கார் வாங்கி கொடுங்க என்று சொல்கிறார். இதை கேட்டதும் பாண்டியனுக்கு ஒரு விதத்தில் சந்தோஷமாக இருந்தாலும் இன்னொரு பக்கம் அதெல்லாம் ஒன்னும் தேவையில்லை என்னுடைய மகளுக்கு நான் ஆசைப்பட்டு தான் செய்கிறேன்.

நீங்கள் கேட்டதே எனக்கு போதும் என்று சந்தோசமாக பேசி அனுப்பி விடுகிறார். அடுத்ததாக கோமதி அனைவரும் பாண்டியன் சொன்ன வீட்டுக்கு வந்து விட்டார்கள். அங்கே போனதும் வீடு எல்லாம் சவுரியமாக இருக்கிறது என்று பாண்டியனிடம் போன் போட்டு சொல்லலாம் என கோமதி கால் பண்ணுகிறார். அப்பொழுது பேசி முடித்துவிட்டு பாண்டியன் கடைக்கு மாப்பிள்ளை வந்து பேசின விஷயத்தை சொல்கிறார்.

இதை கோமதி அங்கு இருப்பவர்களிடம் சொல்லி அரசி வாக்கப்பட்டு போற குடும்பமும் சரி பையனும் சரி எல்லோரும் நல்லவிதமாக இருக்கிறார்கள் என்று சொல்கிறார். அடுத்ததாக சதீஷ் அரசிடம் பேசுவதற்காக போன் பண்ணுகிறார். ஆனால் அரசி சரியாக பேச முடியாமல் பட்டும் படாமல் பேசி போனை வைத்து விடுகிறார். ஆக மொத்தத்தில் பாண்டியன் குடும்பத்தில் சதீஷ் ஒரு நல்ல பெயரை சம்பாதித்து விட்டார்.

ஆனாலும் இவர்களுடைய கல்யாணம் நடக்குமா? சுகன்யா ஏதாவது குட்டையை குழப்பி குமரவேலுடன் சேர்த்து விடுவார்களா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். அடுத்ததாக சுகன்யா பழனிவேலுக்கு போன் பண்ணி வீட்டுக்கு உடனே வர வேண்டும் என்று டார்ச்சர் செய்து ராஜசியாக வீட்டில் பிரச்சனை பண்ணுவதற்கு காத்துக் கொண்டிருக்கிறார்.