Ajith : சமீபகாலமாக தமிழ் சினிமாவில் 100 படங்கள் வெளியானால் அதில் விரல் விட்டு என்னும் அளவுக்கு சில படங்கள் தான் வெற்றி பெறுகிறது. அதுவும் பெரிய நடிகர்களின் படத்திற்கு பிரமோஷன் படு பயங்கரமாக செய்கிறார்கள்.
ஆனால் தியேட்டரில் பார்த்தால் மண்ணை கவ்வி விடுகிறது. அவ்வாறு தான் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் வெளியான சூர்யாவின் கங்குவா படம் பெரும் நஷ்டத்தை சந்தித்தது. இதற்குக் காரணம் படத்தின் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது தான்.
அதேபோல் திருப்பூர் சுப்ரமணியன் சமீபத்திய பேட்டியில் சில விஷயங்களை கூறியிருக்கிறார். அதாவது வீரதீர சூரன் படம் வசூல் ரீதியாக தோல்வியை தான் தழுவி இருப்பதாக கூறி இருக்கிறார்.
வீர தீர சூரன் தோல்வி படம் என்று கூறிய பிரபலம்

அதேபோல் அஜித்தின் குட் பேட் அக்லி படம் விசுவாசம் அளவிற்கு ஓடவில்லை என்றும் கூறியிருக்கிறார். ஃபேன் பாய் படங்களுக்கு எதிர்காலம் இல்லை, மக்கள் ரசிப்பதில்லை என்றும் கூறியுள்ளார்.
மேலும் விஜய்யை நம்பியெல்லாம் தமிழ் சினிமா இல்லை. அவர் சினிமாவில் நடிக்காதது பெரிய இழப்பாக இருக்காது. பொதுவாக பெரிய ஹீரோக்கள் கதையில் தலையிட்டு குழப்புவதால் தான் பல படங்கள் தோல்வி அடைகின்றது என்றும் திருப்பூர் சுப்ரமணியன் கூறியிருக்கிறார்.
இவ்வாறு அவர் பேசி இருப்பது கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஆனாலும் நடிகர்களின் ரசிகர்களுக்காக படம் எடுப்பதை விட்டுவிட்டு நல்ல கதையை எடுத்தால் படம் நன்றாக தான் இருக்கும்.