Mahanadhi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற மகாநதி சீரியலில், வெண்ணிலாவுக்கு சுயநினைவு திரும்பிய நிலையில் வெண்ணிலாவை பத்திரமாக சொந்தக்காரர்களிடம் ஒப்படைத்து விடலாம் என்று விஜய் படாத பாடுபட்டார். அந்த வகையில் வெண்ணிலாவின் மாமாவை தேடி கண்டுபிடித்து அவரிடம் ஒப்படைப்பதற்கு எல்லா ஏற்பாட்டையும் செய்துவிட்டார்.
வெண்ணிலாவின் மாமனாரும் விஜய் சொன்னதை புரிந்து கொண்டு வந்த நிலையில் ராகினி பசுபதி அஜய் 3 பேரும் நுழைந்து வெண்ணிலாவின் மாமா மனசை மாற்றிவிட்டார். அதாவது விஜய் பெரிய பணக்காரர் அவருக்கு ஏகப்பட்ட சொத்து வசதிகள் இருக்கிறது. அவர்தான் வெண்ணிலாவை காதலித்து கல்யாணம் பண்ணியதற்கு அர்த்தமாக கையில் மோதிரத்தை மாற்றி விட்டிருக்கிறார்.
அவரால் தான் வெண்ணிலாவின் குடும்பமே பலியாகி இருக்கிறது என்று வெண்ணிலா மற்றும் மாமாவிடம் சொல்லியதால் இவர்கள் இருவரும் மனசு மாறிவிட்டது. அந்த வகையில் பிரஸ்மீட்டை கூப்பிட்டு என்னுடைய வீட்டுக்காரர் விஜய் தான் எனக்கு நீங்க தான் நியாயம் வாங்கி தரணும் என்று விஜய் மானத்தை வாங்கும்படி வெண்ணிலா செய்து விட்டார்.
உடனே பத்திரிகையாளர்கள் அனைவரும் விஜய் வீட்டு வாசலில் நின்று வெண்ணிலாவின் வாழ்க்கைக்கு நியாயம் கேட்க ஆரம்பித்து விட்டார்கள். இவர்களுக்கு எல்லாம் பதிலடி கொடுக்கும் விதமாக எனக்கு ஒரு முறை தான் கல்யாணம் ஆகி இருக்கிறது. அந்த வகையில் என்னுடைய பொண்டாட்டி காவிரி தான் என்று விஜய் சொல்லி வெண்ணிலா மற்றும் ராகினிக்கு சரியான பதிலடி கொடுத்துவிட்டார்.
இதையெல்லாம் சாரதா வீட்டில் இருந்து குடும்பத்துடன் காவிரி பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் விஜய்க்கு எதிராக ராகினி வெண்ணிலா செயல்படுகிறார்கள் என்று காவிரி புரிந்து கொண்டு புருஷனுக்கு சப்போர்ட் பண்ணும் விதமாக ராகினி வெண்ணிலாவை ஓட ஓட விரட்ட போகிறார்.