Memes: சோசியல் மீடியாவின் ஆதிக்கம் தான் இப்போது அதிகமாக இருக்கிறது. ஏதாவது ஒரு படத்தில் பாட்டு ஹிட் ஆனால் போதும் உடனே ரீல்ஸ் போட ஆரம்பித்து விடுகின்றனர்.

அதிலும் இளம்பெண்கள் அதே போல் காஸ்டியூம் போட்டு சோசியல் மீடியாவில் செய்யும் அலப்பறை கொஞ்ச நஞ்சம் கிடையாது.

ஏற்கனவே கனிமா பாடலை பூஜா ஹெக்டே பார்த்து நொந்து போகும் அளவுக்கு கல்யாண பொண்ணு காஸ்டியூம் போட்டு ஆடியது ஒரு கூட்டம்.

அதை எடுத்து இப்போது சிம்ரன் ஃபீவர் பிடித்திருக்கிறது. குட் பாய் அக்லியில் பிரியா வாரியர் தொட்டு தொட்டு பேசும் சுல்தானா என ஆடி இருந்தார்.

அதைப் பார்த்து இளம்பெண்கள் இப்போது மஞ்சள் ஜாக்கெட், கருப்பு நிற பேண்ட் போட்டு ஆடி அட்ராசிட்டி செய்து வருகின்றனர். டான்ஸ் கூட ஒரு பக்கம் பொறுத்துக்கொள்ளலாம்.

ஆனால் இந்த காஸ்டியூம் தான் ஏத்துக்கவே முடியல மை லார்ட். இளையராஜா பாட்டுக்கு ரைட்ஸ் கேட்டு கேஸ் போட்ட மாதிரி சிம்ரன் டான்ஸ்க்கும் கேஸ் போடணும் போல.
அதுலயும் அமலா ஷாஜி டான்ஸ் ஆடுறது கவுண்டமணி ஸ்டெப் மாதிரியே இருக்கு. எல்லாரும் அந்த வீடியோவை பார்த்து ரத்தம் கக்கி சாவுங்க என நெட்டிசன்கள் பங்கம் செய்து வருகின்றனர்.
இப்படி சிம்ரனே என்னடா என்னை அவமானப்படுத்துறீங்களான்னு கேக்குற அளவுக்கு கூத்து நடக்கிறது. அப்படி சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகி வரும் சில மீம்ஸ் தொகுப்பு இதோ.