சுயநலமாக இருக்கும் கோமதி, ராஜி எடுக்க போகும் முடிவு.. சரவணனிடம் சத்தியம் வாங்கிய பழனி, பீல் பண்ணும் தங்கமயில்

Pandian Stores 2 Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், ராஜிக்கு எப்படியாவது நடன போட்டியில் கலந்து கொண்டு பைக்கை பரிசாக பெற்று கதிருக்கு கொடுக்க வேண்டும் என்று ஆசை வந்துவிட்டது. அதனால் கோமதியிடம் பர்மிஷன் வாங்கலாம் என்று மீனாவை கூட்டிட்டு ராஜி மாமியாரை தாஜா பண்ணுகிறார். ஆனால் கோமதி, வந்த இடத்தில் தேவையில்லாமல் ஆடுறேன் பாடறேன்னு சொல்லி பிரச்சினையை இழுக்க வேண்டாம்.

வந்த வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு போகணும், தேவையில்லாத விஷயத்தில் தலையிட்டு என்னை பொல்லாதவளாக ஆக்கிடாதே என்று திட்டி விடுகிறார். ஆனால் இதே கோமதி தான் பாண்டியன் குலதெய்வம் கோயிலுக்கு போன பொழுது ஒரு கிரைண்டருக்கு ஆசைப்பட்டு மருமகள்களிடம் எப்படியாவது எல்லா போட்டியிலும் ஜெயித்து எனக்கு கிரைண்டரை வாங்கிக் கொடுக்க வேண்டும் என்று சொன்னார்.

கோமதி ஆசைப்பட்டால் கிடைக்க வேண்டும் மருமகள் நினைக்கும் விஷயம் எதுவும் நடக்க கூடாது என்று சுயநலமாக இருக்கிறார். ஆனாலும் ராஜி எப்படியாவது கோமதி மனசை மாற்றி நடனப் போட்டியில் கலந்து கொண்டு பரிசை வெல்வார். அப்படி பரிசை வாங்கும் போது அது முதல் பரிசாக தான் இருக்கும். முதல் பரிசு கார் என்பதால் அந்தக் கார் அரசிக்கு வரதட்சணையாக கொடுக்கலாம் என்று பாண்டியன் முடிவு எடுக்கப் போகிறார்.

அடுத்ததாக சுகன்யா, பழனிவேலுவை திட்டிக்கொண்டே வேலை வாங்குகிறார். பழனியும் எதுவும் எதிர்த்துப் பேச முடியாமல் வாயை மூடிக்கொண்டு எல்லா வேலையும் பார்க்கிறார். அப்பொழுது அங்கே வந்த சரவணன், சுகன்யா பழனியை திட்டுவதை கேட்டு விடுகிறார். சரவணன் இருக்கிறார் என்று தெரிந்ததும் சுகன்யா பேச்சு மாற்றிக் கொண்டு நல்லவள் போல் வேஷம் போட்டு விடுகிறார்.

உடனே பழனி, சரவணனை பார்த்து இப்ப புரிகிறதா என்னுடைய நிலைமை என்ன என்று. எதுவும் செய்ய முடியாமல் சூழ்நிலை கைதியாக இருக்கிறேன் என்று பீல் பண்ணி பேசுகிறார். அப்பொழுது சரவணன், இதற்கெல்லாம் முடிவு கட்டுகிறேன் மாமா, அம்மா வந்தவுடன் எல்லாத்தையும் சொல்லுகிறேன் என்று சொல்கிறார். ஆனால் பழனி அதெல்லாம் வேண்டாம் அக்காவுக்கு தெரிந்தால் என்னுடைய வாழ்க்கை நினைத்து ரொம்பவே கஷ்டப்பட ஆரம்பித்து விடுவார்.

அந்த கஷ்டத்தை அக்காக்கு கொடுக்கக் கூடாது என்பதற்காகத்தான் நான் எல்லா வேதனையும் அனுபவிக்கிறேன். எல்லா கஷ்டமும் என்னுடைய போகட்டும் என்று சொல்லி சரவணன் இடம் யாரிடமும் சொல்ல கூடாது என்று சத்தியம் வாங்கி விடுகிறார். அடுத்ததாக சரவணன் தன்னுடன் பேசவில்லையே என்று தங்கமயில் அழுது ஃபீல் பண்ணிக் கொண்டிருக்கிறார்.

அதனால் சரவணனுக்கு தொடர்ந்து ஃபோன் பண்ணி மெசேஜ் பண்ணி பார்க்கிறார். சரவணன் எதையுமே கண்டு கொள்ளாமல் தங்கமயிலை அலட்சியப்படுத்தியதால் அம்மாவுக்கு போன் பண்ணி பீல் பண்ணுகிறார். அந்த சமயத்தில் சரவணன், தங்கமயிலிடம் பேசுவதற்கு போன் பண்ணுகிறார். அதாவது சுகன்யாவை விட தங்கமயில் எவ்வளவோ பரவாயில்லை என்பதை புரிந்து கொண்ட சரவணன் அடுத்து தங்கமயிலை தண்டிக்கும் விதமாக எதுவும் பண்ண மாட்டார்.