எங்க அம்மாவ நீ கல்யாணம் பண்ணலாம் உங்க அம்மாவ நான் கட்டிக்க கூடாதா.. பாண்டியராஜனின் திருட்டு முழியும், மறக்க முடியாத படங்களும்

Actor Pandiarajan: இப்பல்லாம் என்னப்பா படம் எடுக்குறாங்க. பாட்டு என்ற பேர்ல ரைஸ் மில்லுல கேட்கிற சத்தமும், சண்டை, கொலை ரத்தம்னு அதைப் பார்த்தாலே மன உளைச்சல் அதிகமாகுது.

இதுதான் இப்போதைய நிலைமை. ஆனால் ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் வெரைட்டி வெரைட்டியான படங்கள் வந்ததுண்டு. தரமான படங்களை கைத்தூக்கிவிட ரசிகர்கள் தயங்கியதே கிடையாது.

அதேபோல் திறமையானவர்களுக்கு வாய்ப்பும் கிடைக்கும். அப்படி ஹீரோவாவதற்கு உயரமோ கட்டுமஸ்தான உடம்பும் தேவையில்லை என நெத்தியடியாக சொல்லி நிரூபித்து காட்டியவர் தான் பாண்டியராஜன்.

பாண்டியராஜனின் திருட்டு முழியும், மறக்க முடியாத படங்களும்

திருட்டு முழி தான் இவருடைய அடையாளம். இயக்குனர் நடிகர் இசையமைப்பாளர் என பல பரிமாணங்களை கொண்ட இவரை சில வருடங்களில் வில்லனாக கூட பார்த்தோம்.

பாக்யராஜிடம் உதவி இயக்குனராக இருந்த இவர் கன்னி ராசி படம் மூலம் இயக்குனரானார். அதே வருடத்தில் ஆண்பாவம் படத்தின் மூலம் நடிகராகவும் மாறினார்.

அதில் ஆண்பாவம் படத்தை இன்று பார்த்தாலும் குபீர் சிரிப்பு வரும். ஒவ்வொரு வசனமும் யதார்த்த தோரணையில் இருக்கும்.

தனக்கு கல்யாணம் ஆகாத விரக்தியில் அப்பாவான விகே ராமசாமியிடம் பாண்டியராஜன் என் அம்மாவை நீ கட்டிக்கலாம் உன் அம்மாவ நான் கல்யாணம் பண்ணிக்க கூடாதா என கேட்பார்.

இப்படி பல வசனங்கள் நம்மை கலகலக்க வைக்கும். அதற்கேற்றார் போல் திருட்டு முழியுடன் அவருடைய நடிப்பும் வேற லெவலில் இருக்கும்.

அதை அடுத்து கோபாலா கோபாலா படத்தில் லிப்ட்டில் குஷ்புவுக்கு வெஜிடபிள் பிரியாணி சமைத்துக் கொடுப்பார். அந்த காட்சி இப்போதும் கூட யூடியூபில் பலர் தேடிப் பார்ப்பதுண்டு.

இப்படியாக பல வெற்றி படங்களை கொடுத்திருக்கிறார். அது மட்டுமா எங்கள் அண்ணா உள்ளிட்ட படங்களில் இவருடைய காமெடி ரோலும் அசத்தலாக இருந்தது.

அதேபோல் அஞ்சாதே படத்தில் வில்லனாகவும் மிரட்டி இருப்பார். இப்படியாக 80, 90 காலகட்டத்தில் பசுமையான நினைவுகளோடு அற்புதமான படங்களை கொடுத்த இயக்குனர்களில் பாண்டியராஜனும் ஒருவர். இவரை மறக்க முடியுமா