Veera Serial: ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வருகின்ற வீரா சீரியலில், கார்த்திக் பிருந்தா இருவரும் காதலித்து வந்த நிலையில் இவர்களுடைய கல்யாணத்தை பெற்றோர்கள் ஏற்று குடும்பத்துடன் நடத்தி வைப்பதற்கு தயாரானார்கள். அந்த வகையில் இவர்களுடைய திருமணம் நெருங்கிய நிலையில் கண்மணி மற்றும் விஜி போட்ட சதியில் பிருந்தா மற்றும் கார்த்திக்கின் வாழ்க்கை கேள்விக்குறியாகிவிட்டது.
அதாவது கண்மணி போட்ட சதியை தனக்கு சாதகமாக விஜி மாற்றிக் கொண்டார். அந்த வகையில் மாறன் குடும்பத்தை பழிவாங்க வேண்டும் என்று நினைத்த விஜி கார்த்திக் தன் வாழ்க்கையை மோசம் பண்ணி விட்டார் என்று ஒரு கட்டுக் கதையை கட்டி விட்டார். இதனால் அங்கு இருப்பவர்கள் விஜி சொன்னதை நம்பி கார்த்திகை விஜி கழுத்தில் தாலி கட்ட வைத்து விட்டார்கள்.
இதனால் நொந்து போன பிருந்தாவை தேடி கார்த்திக் வீட்டுக்கு போனார். அங்கேயும் போய் விஜி ஆர்ப்பாட்டம் பண்ணி பிருந்தாவை அசிங்கப்படுத்தி விட்டார். இதனால் பிருந்தா விஷம் குடித்து சீரியசான நிலைமைக்கு ஆஸ்பத்திரியில் இருந்தார். பிறகு ஏகப்பட்ட குளறுபடிகள் மாறன் வீட்டில் நடந்த பொழுது வள்ளி முழுக்க முழுக்க விஜிக்கு சப்போட்டாக நின்று விட்டார்.
அதனால் எது உண்மை என்று தெரியாமல் எல்லோரும் குழப்பத்தில் இருந்த பொழுது மாறன் மட்டும் கார்த்திக் சொல்வதில் ஏதோ ஒரு உண்மை இருக்கிறது என்று புரிந்து கொண்டார். அந்த வகையில் கார்த்திக்கின் காதல் கைகூட வேண்டும் என்பதால் கார்த்திக் பிருந்தா கழுத்தில் தாலி கட்டுவதற்கு சப்போர்ட் பண்ண ஆரம்பித்து விட்டார்.
அந்த வகையில் வீராவை கூட்டிட்டு கோவிலுக்கு வரும் மாறன், பிருந்தா சாமி கும்பிட்டு இருக்கும் பொழுது கார்த்திகை தாலி கட்ட வைத்து விட்டார். இதை கொஞ்சம் கூட எதிர்பார்க்காத வீரா அதிர்ச்சியாக்கிய நிலையில் பிருந்தாவுக்கு கல்யாணம் ஆகிவிட்டதால் எதுவும் பண்ண முடியாமல் கார்த்திக் மற்றும் பிருந்தா இரண்டு பேரையும் வீட்டிற்கு கூட்டிட்டு வருகிறார்.
அப்படி வந்த பொழுது விஜி இந்த விஷயத்தை பெருசாக்கி இதற்கெல்லாம் காரணம் வீரா தான் என்று மொத்த பழியையும் வீரா மீது போட்டு வள்ளியை நம்ப வைத்து வீராவுக்கும் வள்ளிக்கும் இடையே விரிசலை ஏற்படுத்தி விட்டார். இந்த கல்யாணத்தை எதிர்பார்க்காத கண்மணிக்கு மிகப்பெரிய அதிர்ச்சியாகிவிட்டது. எது எப்படியோ எல்லோரும் எதிர்பார்த்தபடி கார்த்திக் மற்றும் பிருந்தாவின் கல்யாணம் நல்லபடியாக முடிந்து விட்டது. இனி விஜியின் சதியை கண்டுபிடித்து வீட்டை விட்டு விரட்டும் அளவிற்கு வீரா மற்றும் மாறன் உண்மையை கண்டுபிடிக்க போகிறார்கள்.