விஜயா வயிற்றில் பாலை வார்த்த மீனா.. சிந்தாமணி முகத்தில் கரியை பூச ஆவேசமாக கிளம்பிய முத்து

Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், மண்டபத்தின் டெக்கரேஷன் ஆர்டரை கைப்பற்றுவதற்காக மீனா, சீதா பணத்தை எடுத்துவிட்டு மாமனாரிடம் சொல்லி வீட்டை விட்டு கிளம்புகிறார். இதை பார்த்த விஜயா உடனே சிந்தாமணிக்கு போன் பண்ணி டெக்ரேசன் ஆர்டரை பிடிப்பதற்காக மீனாவுக்கு பணம் கிடைத்து விட்டது.

இந்த பணத்தை எடுத்துட்டு தான் மண்டபத்திற்கு போகிறார், நீங்கள் ஏதாவது பண்ணி தடுத்து விடுங்கள் என்று தகவலை சொல்லி விடுகிறார். உடனே சிந்தாமணி, மீனா ஆட்டோவில் பணம் எடுத்துட்டு வருவதை தெரிந்து விட்டு அடியாட்களை அனுப்பி அந்த பணத்தை திருடுவதற்கு பிளான் பண்ணி விட்டார். சிந்தாமணி போட்ட பிளான் படி மீனா வைத்திருந்த பணத்தை அந்த நபர்கள் ஆட்டையை போட்டு விட்டார்கள்.

அவர்களை பின்னாடியே போய் துரத்தி பிடிக்க வேண்டும் என்பதற்காக மீனா போராடிய நிலையில் கையில் அடிபட்டுவிட்டது. உடனே மீனாவுடன் சேர்ந்து பூ கட்டுபவர்கள் மீனாவை ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போய் ட்ரீட்மென்ட் கொடுக்கிறார்கள். இதைக் கேள்விப்பட்ட முத்து ஆஸ்பத்திரிக்கு சென்று மீனாவுக்கு ஆறுதல் சொல்லி வீட்டிற்கு கூட்டிட்டு வருகிறார்.

வீட்டுக்கு கட்டுடன் வந்த மீனா அழுது கொண்டே இருப்பதை பார்த்து அங்கு இருப்பவர்கள் எல்லோரும் என்ன ஆச்சு என்று கேட்ட நிலையில் முத்து நடந்த விஷயத்தை சொல்கிறார். உடனே விஜயா, இப்பொழுதுதான் என்னுடைய வயிற்றில் பாலை வார்த்திருக்கிறாய் என்று, மீனா ஏமாந்த பணத்தின் மூலம் சந்தோசமடைகிறார். பிறகு விஷயத்தை கேள்விப்பட்டு மீனாவின் அம்மா, தம்பி, சீதா அனைவரும் வீட்டிற்க்கு வருகிறார்கள்.

வந்து மீனாவுக்கு ஆறுதல் சொல்லிய நிலையில் முத்து அனைவரிடமும் பேசிவிட்டு அந்த மண்டபத்தின் அட்ரஸை வாங்கிவிட்டு அங்கு போய் நான் பேசிவிட்டு வருகிறேன் என்று ஆவேசமாக கிளம்புகிறார். அப்படி கிளம்பும்போது எல்லோரும் சாப்பிட்டு தான் போக வேண்டும் என்று சொல்லிவிட்டார். உடனே அந்த நிமிஷத்திலேயே விஜயா என்னது இவங்க எல்லாம் இங்க சாப்பிடனுமா என்று ஏளனமாக கூறிவிட்டார்.

உடனே எல்லோருக்கும் ரொம்பவே அவமானமாக போய்விட்டது ஆனாலும் முத்துவும் மீனாவும் இதற்கு எதுவும் பண்ண முடியாத சூழ்நிலையால் மீனாவின் குடும்பம் அங்கிருந்து கிளம்பி விட்டது. அந்த வகையில் மண்டபத்திற்கு போகும் முத்து நிச்சியம் சிந்தாமணி முகத்தில் கரியை பூசும் விதமாக பணத்தை கட்டி மீனாவுக்கு அந்த ஆர்டரை வாங்கிக் கொடுத்து விடுவார்.