சிங்கப்பெண்ணில் ஆனந்தி கொடுத்த ஆதாரம், விசாரணையை தொடங்கும் தோழிகள்.. ஆட்டம் சூடு பிடிக்குதே!

Singapenne: சன் டிவியில் ஒளிபரப்பாகும் சிங்க பெண்ணே சீரியலின் இன்றைய ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.

ஆனந்தி தான் கர்ப்பமாக இருப்பதை யாரிடமாவது சொல்லி அந்த பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என்பதுதான் நேயர்களின் ஆசையாக இருந்தது.

ஆனந்தி கொடுத்த ஆதாரம்

இப்போது மனம் திறந்து தன்னுடைய தோழிகளிடம் நடந்ததை சொல்லி இருக்கிறாள். மேலும் அவளுடைய தோழிகள் அன்புவை சந்தேகப்படும்போது அன்பு நிரபராதி என்பதையும் நிரூபித்து இருக்கிறாள்.

அடுத்து தோழிகளின் உதவியோடு தனக்கு நடந்த அநியாயத்தை கண்டுபிடிக்க இருக்கிறாள். ஆனந்திக்கு பார்ட்டியின் போது தான் தனக்கு இதுபோல் நடந்திருக்க வேண்டும் என்ற சந்தேகம் இருந்து கொண்டே இருந்தது.

இது பற்றி தன்னுடைய தோழிகளிடம் சொல்கிறாள். அந்த கேளிக்கை விடுதியின் அட்ரஸை வாங்கிக் கொண்டு சல்மா மற்றும் காயத்ரி நேரடியாக செல்ல இருக்கிறார்கள்.

சொன்ன தேதியில் சிசிடிவி கேமராவை சோதனை செய்தால் மகேஷ் அந்த ரூமுக்கு சென்றது தெரிந்துவிடும். அதோடு மட்டுமில்லாமல் மித்ராவும் கையும் களவுமாக சிக்க வாய்ப்பிருக்கிறது.

ஆனால் ஆனந்தி மற்றும் அவளுடைய தோழிகள் பேசுவதை மித்ரா கேட்டு விடுகிறாள். இதனால் அவர்களுக்கு முன்பே அந்த ஹோட்டலுக்கு சென்று ஆதாரங்களை அழிப்பதற்கும் நிறைய வாய்ப்பு இருக்கிறது. ஆனந்திமுந்துகிறாளா அல்லது மித்ரா முந்துகிறாளா என பொறுத்திருந்து பார்க்கலாம்.