Vadivelu: வடிவேலு சுந்தர் சி இயக்கத்தில் கேங்கர்ஸ் படத்தில் நடித்திருக்கிறார். இந்த படம் இன்று திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் இதற்கு முன்னதாக பிரமோஷன் நிகழ்ச்சியில் வடிவேலு கலந்து கொண்டிருந்தார்.
பல வருடங்களாக சினிமாவில் நடிக்க தடை விதித்த காரணத்தினால் நடிக்காமல் இருந்த வடிவேலு மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்தார். ஆனால் அந்த படங்கள் கை கொடுக்காத நிலையில் மாமன்னன் படம் ஒரு நல்ல திருப்புமுனையாக அமைந்தது.
இதை அடுத்து கேங்கர்ஸ் படம் பெயர் வாங்கி கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வடிவேலு என்ற அடையாளம் வருவதற்கு கேப்டன் விஜயகாந்த் தான் காரணம் என பலர் கூறி இருக்கின்றனர். ஒரே ஊர்காரர் என்பதால் வடிவேலுவை வளர்த்து விட்டார்.
கொந்தளித்த பேசிய வடிவேலு
விஜயகாந்த் இல்லை என்றால் வடிவேலு இல்லை என்ற கூறப்பட்டது. ஆனால் பல மேடைகளில் விஜயகாந்தை எதிர்த்து வடிவேலு பேசி இருந்தார். அவர் இறந்தபோது கூட வடிவேலு அஞ்சலி செலுத்த போகவில்லை. இந்த சூழலில் சமீபத்தில் பேசிய வடிவேலு எனக்கு வாய்ப்பு கொடுத்தது ராஜ்கிரண் தான்.
நான்கு வருடங்களுக்கு மேல் அவரது ஆபீஸில் தங்கி இருந்தேன். அதன் பிறகு கமல் சார் தான் தேவர் மகன் படத்தில் வாய்ப்பு கொடுத்து தூக்கி விட்டார். வேறு எவனும் என்னை காப்பாத்தல என்று வடிவேலு பேசி இருக்கிறார்.
ஆனால் சின்ன கவுண்டர் படத்தில் வடிவேலுக்கு வாய்ப்பு கொடுத்து அவரை தூக்கி விட்டது விஜயகாந்த். அவர் இறந்த பின்பும் கூட அந்த மனிதன் மீது வன்மம் தீராமல் வடிவேலு இப்படி பேசுகிறார் என பலரும் திட்டி தீர்த்து வருகிறார்கள்.