Pahalgam: ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதல், நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் டெல்லியில் உயர் மட்ட பாதுகாப்பு ஆலோசனை கூட்டம் நடந்தது.
இந்த கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், மூன்று படைப்பிரிவுகளின் தளபதிகள் மற்றும் பலர் பங்கேற்றனர். சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக இந்த ஆலோசனை நடைபெற்றது.
இந்த தாக்குதலுக்குப் பிறகு இந்தியா பாகிஸ்தானுக்கு எதிராக கீழ்காணும் முக்கியமான நடவடிக்கைகளை அறிவித்துள்ளது:
*.அட்டாரி-வாகா எல்லை உடனடியாக மூடப்படுகிறது.
*.சிந்து நதியியல் ஒப்பந்தம் இரு நாடுகளுக்கும் இடையில் நிறுத்தப்படும்.
*.இஸ்லாமாபாதில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் அழைக்கப்படுவார்கள்.
*.இந்தியாவில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் மே 1க்குள் நாடு விட்டு வெளியேற வேண்டும்.
*.பாகிஸ்தான் தூதரகத்தில் பணியாற்றும் அதிகாரிகளின் எண்ணிக்கை 30-ஆக குறைக்கப்படும்.
*.இந்தியா வழங்கிய பாகிஸ்தான் சுற்றுலா விசாக்கள் தற்காலிகமாக இரத்து செய்யப்படும்.
*.சுற்றுலா விசா கொண்டு இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்கள் 48 மணி நேரத்தில் வெளியேற வேண்டும்.
*.சார்க் விசா ஒப்பந்தத்தின் கீழ் பாகிஸ்தானியர்கள் இந்தியா வர தடைசெய்யப்படுகிறது.
*.பாகிஸ்தானியர்களுக்கு இந்தியாவிற்குள் பயணம் செய்ய அனுமதி இல்லை.
*.முப்படைகளுக்கு முழுமையான தயார் நிலை அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கைகள் அனைத்தும் இந்தியாவின் தேசிய பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.