மணிவிழாவை மூடு விழாவாக்கிய ரேணுகா.. மூக்கில் மிளகாய் பொடி போட்டு ஏவி விட்ட குணசேகரன்

எதிர்நீச்சல் 2இல் குணசேகரனின் மணிவிழா கொண்டாட்டம் தான் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருக்கிறது. தும்பிகளை ஏவி விட்ட குணசேகரன் மூக்கரு பட்டுவிட்டார். இதனால் புதியதொரு அஸ்திரத்தை கையில் எடுத்து தந்தரதாரியாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.

ஞானம், கதிர், சக்தி மூவரையும் அடி விழாத குறையாய் திட்டி தீர்த்து விட்டார் ரேணுகா. ஒரு பக்கம் மணிவிழா எண்ணனே தெரியாமல் அனுமதி கேட்டு வந்த மூவரையும் வாய்க்கு வந்தபடி அசிங்கப்படுத்தி விட்டார் ரேணுகா. இதனால் மூவரும் நொந்து நூடுல்ஸ் ஆகிவிட்டனர்.

ஓரளவு நல்லவனாய் இருக்கும் சக்தியையும் விடவில்லை ரேணுகா. அவரையும் உனக்கு வெட்கமாக இல்லையா இப்படி வந்து கேட்பதற்கு உங்கள் அண்ணன், அண்ணியும் வாழ்ந்த வாழ்க்கை உங்களுக்கு தெரியாதா, இதில் மணிவிழா ஒரு கேடா என சக்தியை வாய்க்கு வந்தபடி திட்டி விட்டார்.

மூக்குடைபட்ட குணசேகரன் இப்பொழுது ஈஸ்வரியின் தந்தையை மூக்கில் மிளகாய் பொடி போட்டு ஏவி விட்டுள்ளார். அவரும் வீட்டிற்குள் வந்த உடனேயே கடும் கோபத்துடன் ஈஸ்வரியை வாய்க்கு வந்தபடி திட்டுகிறார்.

ஊர் சுற்றி திரிந்து குடும்ப பெயரை கெடுக்க போகிறாயா என வீட்டிற்குள் நுழைந்த உடனேயே ஈஸ்வரியை லெப்ட் அண்ட் ரைட் வாங்குகிறார். சப்போர்ட்டுக்கு வந்த தங்கச்சி மார்களை “நான் உங்களிடம் பேசவில்லை என் மகளிடம் பேசுகிறேன் எங்கள் வழிக்கு வராதீர்கள் என “திட்டி முழு கோபத்தையும் காட்டுகிறார்”.