கோபியையும் ஈஸ்வரியையும் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய பாக்கியா.. சுதாகர் ஆடிய ஆட்டத்திற்கு பலியாடாக சிக்கிய இனியா

Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், ப்ளான் பண்ணி காய் நகர்த்தி வரும் சுதாகர் மொத்தமாக பாக்யாவின் குடும்பத்தை ஏமாற்றி விட்டார். ஆரம்பத்தில் பாக்யா, ரெஸ்டாரன்ட் கொடுக்க முடியாது என்று சொன்ன பொழுது சுதாகர் விரித்த வலையில் கோபி சிக்கிவிட்டார். கோபி போட்ட கண்டிஷனில் இனியா சிக்கி சுதாகருக்கு பலியாடாக மாட்டிக் கொண்டார்.

தற்போது எதுவும் பண்ண முடியாத சூழ்நிலையில் பாக்கியா நிலைமை மோசமாக இருக்கிறது. அதாவது சுதாகர் ஹோட்டலை அபகரித்தது ஒரு பக்கமாக இருந்தாலும் இன்னொரு பக்கம் பாக்கியாவை முட்டாளாக்கும் விதமாக பாக்கியாவிடம் ஒரு விதமாகவும் கோபி மற்றும் செழியனிடம் வேறு விதமாகவும் சுதாகர் இரட்டை வேஷம் போட்டு நடித்து வருகிறார்.

உடனே கோபி மற்றும் செழியன் சுதாகர் சொல்வதை நம்பி பாக்கியாவுக்கு ஆறுதல் சொல்லி சின்ன பிள்ளையை ஏமாற்றும் விதமாக பாக்கியவை நம்ப வைத்து வருகிறார். இதனால் நொந்து போன பாக்கியா ரெஸ்டாரண்டில் சுதாகர் பேசிய பேச்சையும் ஹோட்டலை விட்டு வெளியே போங்க என்று சொன்ன விஷயத்தையும் குடும்பத்தில் இருப்பவர்களிடம் சொல்கிறார்.

கோபி மற்றும் செழியன் சுதாகர் வீட்டிற்கு சென்று கேட்ட பொழுது சுதாகர் அப்படியே பேச்சை மாற்றி முழுக்க முழுக்க பாக்யா மீதுதான் தவறு இருப்பது போல் பேசி இவர்களை நம்ப வைத்து விடுகிறார். பிறகு மறுபடி வீட்டிற்கு வந்து பாக்யா தான் ஏதோ தவறாக புரிந்து கொண்டது போல் பேசி அவர்களே அவர்கள் முட்டாள் ஆக்கிக் கொள்கிறார்கள்.

இதனால் கடுப்பான பாக்கியா, உங்களுக்கு வேணா நான் சொல்றது புரியாம இருக்கலாம். எனக்கு எப்பொழுது இனியாவின் கல்யாண பேச்சு எடுத்தீர்களோ அப்பொழுதே இது மாதிரி ஒரு விஷயம் நடக்கப் போகும் என்று தெரியும். அதனால் நான் யாரிடமும் ஏமாறவில்லை தெரிந்துதான் என்னுடைய ஹோட்டலை அவருக்கு தாரவாத்து கொடுத்து இருக்கிறேன்.

அதனால் எனக்கு யாரும் அட்வைஸ் பண்ணுகிறேன் என்று பெயரில் வந்து பேச வேண்டாம் என்று ஈஸ்வரியையும் கோபியையும் லெப்ட் அண்ட் ரைட் வாங்கி விட்டார். ஆனாலும் அடங்காத சுதாகர் இன்னும் பாக்யாவிற்கு குடைச்சொல் கொடுக்கும் விதமாக ஹோட்டலில் இருக்கும் எல்லா பொருளையும் வெளியே தூக்கி எறிந்து விட்டு மாமனார் போட்டோவையும் வெளியே போட்டு விட்டார்.

இதனால் ஆக்ரோஷமான பாக்கியம் சுதாகரை சந்தித்து சவால் விட்டு இந்த பிரச்சினை உங்களுக்கும் எனக்கும் தான். இதனால் இனியாவின் வாழ்க்கைக்கு எந்த விதத்திலும் பாதிப்பு வரக்கூடாது. அப்படி ஒரு சின்ன கஷ்டம் வந்து விட்டாலும் நான் சும்மா இருக்க மாட்டேன் என்று எச்சரிக்கை கொடுத்து விட்டார். ஆனாலும் இந்த சுதாகர் நிச்சயம் நித்தீஷ் மற்றும் இனியவை பிரிப்பதற்கு பிளான் பண்ணி பாக்யாவிற்கு கஷ்டத்தை கொடுக்க நினைப்பார்.