Mahanadhi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற மகாநதி சீரியலில், ஏற்கனவே காவேரி மற்றும் விஜய் ஒப்பந்த கல்யாணம் பண்ணியதால் ஏகப்பட்ட குளறுபடிகள் ஆகிவிட்டது. முக்கியமாக காவிரியின் குடும்பம் இந்த ஒப்பந்த கல்யாணத்தை ஏற்றுக் கொள்ள முடியாமல் விஜய் இடமிருந்து காவிரியை பிரித்துக் விட்டார்கள். இந்த சூழ்நிலையில் காவிரி கர்ப்பமாக இருப்பதால் வீட்டில் சொல்ல முடியாமலும் வெண்ணிலா பிரச்சனை முடிவுக்கு வராமலும் விஜய் இடம் மறைத்து கொண்டு வருகிறார்.
இதை எல்லாம் தாண்டி விஜய், வெண்ணிலாவின் மாமாவை கண்டுபிடித்து கையோடு வீட்டிற்கு கூட்டிட்டு வந்தார். ஆனால் அப்படி வந்த வெண்ணிலவின் மாமாவை ராகினி மற்றும் பசுபதி சந்தித்து சூழ்ச்சி பண்ண ஆரம்பித்தார்கள். அந்த சூழ்ச்சியில் சிக்கிய வெண்ணிலாவின் மாமா மற்றும் வெண்ணிலா, விஜய் பண்ணியது துரோகம் என்று பத்திரிகையாளர்களிடம் பேட்டி கொடுத்து விஜய் மற்றும் காவிரியை காயப்படுத்தி விட்டார்.
இதனால் ஆத்திரத்தில் விஜய் இருக்கும் பொழுது வீட்டிற்கு வெண்ணிலா மற்றும் மாமா வருகிறார்கள். உடனே அவர்களை பார்த்த கோபத்தில் விஜய் வெளியே அனுப்பி வாய்க்கு வந்தபடி திட்டி சண்டை போடுகிறார். உங்களுக்கு என்ன சந்தேகமாக இருந்தாலும் நீங்கள் என்னிடம் நேரடியாக பேசி கேட்டுக் கொண்டிருக்க வேண்டும். அதை விட்டுவிட்டு என்னை முதுகில் குத்தும் விதமாக பத்திரிகையாளரிடம் சொன்னது ஏற்றுக்கொள்ள முடியாது என்று சொல்கிறார்.
அதற்கு வெண்ணிலாவின் மாமா என்னுடைய பொண்ணு வாழ்க்கை கேள்வி குறியாகி போய்விடக்கூடாது என்பதற்காக தான் நான் அப்படி பண்ணேன் என்று சொல்கிறார். உடனே விஜய் அவங்க கிட்ட போனா உங்களுக்கு பதில் கிடைக்குமா அப்போ அப்படியே போங்க என்று திட்டிவிட்ட நிலையில் பத்திரிகையாளர்களும் வந்து விஜயை ரொம்பவே காயப்படுத்தி விட்டார்கள்.
போதாதற்கு காவேரி வீட்டிற்கும் சென்று உங்களுக்கும் விஜய்க்கும் என்ன சண்டை ஏன் இரண்டு பேரும் பிரிந்து இருக்கிறீர்கள் என்று கேள்வி மேல் கேள்வி கேட்டு சாரதாவை டென்ஷன் படுத்தி விட்டார்கள். உடனே சாரதா எங்களுக்கும் அந்த தம்பிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என் வீட்டிற்கு யாரும் வராதீர்கள் என்று சொல்லி அனுப்பி விட்டார்கள்.
எப்படியாவது சாரதா மனசை மாற்ற வேண்டும் காவிரியுடன் வாழ வேண்டும் என்று நினைக்கும் விஜய்க்கு சாரதா குட் பாய் சொல்லும் விதமாக எங்களுக்கும் அவர்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று சொல்லி விலகி விட்டார். இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருக்கும் காவிரி வயிற்றில் வளரும் குழந்தையை நினைத்தும் ஆசை ஆசையாக மனதில் சுமந்து வரும் விஜய்க்காகவும் நிச்சயம் சப்போர்ட் பண்ணி வெண்ணிலாவின் பிரச்சினையை முடிவு கொண்டு வரணும்.
ஆனால் அதையெல்லாம் விட்டுவிட்டு அம்மா என்ன சொன்னாலும் அதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது கொஞ்சம் ஏற்றுக்கொள்ள முடியாததாக இருக்கிறது. ஏனென்றால் யார் என்ன சொன்னாலும் விஜயை பற்றி காவிரிக்கு நன்றாகவே தெரியும். அந்த வகையில் விஜய்யுடன் சேர்ந்து வயிற்றில் இருக்கும் குழந்தையை ஊருக்கு தெரியப்படுத்தி விட்டால் வெண்ணிலாவின் பிரச்சினை சுமுகமாகிவிடும்.