தரமான கம்பேக் கொடுத்த 5 தமிழ் சினிமா நடிகைகள்.. FDFS ஷோ வரை தெறிக்க விட்ட நயன்தாரா!

Nayanthara: கதாநாயகிகள் தங்களுடைய சொந்த காரணத்திற்காக சினிமாவை விட்டு ஒதுங்குவதும், பின்னர் அதே சினிமாவை நம்பி வருவதும் வழக்கமாக நடப்பது.

ஆனால் சினிமாவை தேடி திரும்பி வரும்போது ஒரு சிலருக்கு தான் அந்த சினிமா கை கொடுப்போம். அப்படி தரமான கம்பேக் கொடுத்த ஐந்து நடிகைகளை பற்றி பார்க்கலாம்.

தெறிக்க விட்ட நயன்தாரா!

நயன்தாரா: ஸ்ரீ ராம ராஜ்ஜியம் படம் தான் தன்னுடைய கடைசி படம் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டு கிளம்பினார் நயன்தாரா.

மூன்று வருடங்களுக்குப் பிறகு ராஜா ராணி படத்தின் மூலம் கம்பேக் கொடுத்தவர் நயன்தாராவுக்கு லேடி சூப்பர் ஸ்டார் பட்டம் வரை கொடுத்து அழகு பார்த்தார்கள் தமிழ் சினிமா ரசிகர்கள்.

ஹீரோயினை மையமாக வைத்து நயன்தாரா நடித்த அத்தனை படங்களுமே சூப்பர் ஹிட் அடித்தது.

ஹீரோக்களுக்கு இணையாக முதல் நாள் முதல் காட்சி ரசிகர்கள் கொண்டாட்டத்தோடு இருந்தது நயன்தாராவுக்கு தான்.

ஜோதிகா: காதல் திருமணம், இரண்டு குழந்தைகள் என செட்டில் ஆன நடிகை ஜோதிகா எட்டு வருடங்களுக்குப் பிறகு 36 வயதினிலே படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார்.

தமிழ் சினிமாவை தாண்டி தற்போது மலையாளம், இந்தி படங்களிலும் நடித்து வருகிறார்.

சமீபத்தில் உடல் எடையை எல்லாம் குறைத்து பெண்களுக்கு மிகப்பெரிய இன்ஸ்பிரேஷன் ஆக மாறி வருகிறார்.

நதியா: 90களின் காலகட்டத்தில் பிரபலமாக இருந்த நடிகை நதியா 10 வருடங்கள் பிரேக்குக்கு பிறகு எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி படத்தில் நடித்தார்.

இதை தொடர்ந்து நதியாவுக்கு நிறைய பட வாய்ப்புகள் கிடைத்தது. வெளிநாட்டில் செட்டில் ஆகிவிட்டதால் வரும் வாய்ப்புகளை எல்லாம் தட்டி கழித்து ஒரு சில படங்களில் தான் நடிக்கிறார்.

லைலா: 90ஸ் கிட்ஸ்களின் ஜெனிலியாவாக இருந்தவர்தான் நடிகை லைலா.

தன்னுடைய ரசிகரையே திருமணம் செய்து கொண்ட நிலையில் 16 வருடங்களுக்குப் பிறகு கார்த்தி நடித்த சர்தார் படத்தின் மூலம் வேண்டும் கம்பேக் கொடுத்தார்.

சிம்ரன்: திருமணத்திற்குப் பிறகு நடிகை சிம்ரன் சின்னத்திரை மூலம் தான் மீண்டும் என்ட்ரி ஆனார்.

கிடைக்கும் பட வாய்ப்புகளை எல்லாம் சரியாக பயன்படுத்திக் கொண்ட சிம்ரனுக்கு பாவ கதைகள், பேட்ட, மகான் போன்ற படங்கள் நல்ல பெயரை வாங்கிக் கொடுத்தது.

தற்போது அஜித் நடிப்பில் வெளியான குட் பேட் அக்லி படம் மீண்டும் 2k கிட்ஸ்களுக்கு அறிமுகப்படுத்தியது என்று தான் சொல்ல வேண்டும்.