Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், முத்து செல்வத்தை கூட்டிட்டு மண்டபத்திற்கு போய் என் மனைவி மீனா பணத்தை ஏற்பாடு பண்ணி இங்கே அட்வான்ஸ் பணத்தை கட்டுவதற்கு வந்து கொண்டிருந்தார். அப்பொழுது திடீரென்று மீனா கொண்டு வந்த பணத்தை திருடிட்டு போய் விட்டார்கள். அதனால் இன்னைக்கு ஒரு நாள் எனக்கு டைம் கொடுங்க நாளைக்கு பணத்தை ரெடி பண்ணுகிறேன் என்று சொல்லி டைம் கேட்கிறார்.
அதற்கு அந்த மண்டபத்தின் மேனேஜர் நானும் மீனா வருவாங்க என்று ரொம்ப நேரம் வெயிட் பண்ணிக் கொண்டிருந்தேன். ஆனால் கடைசி நிமிஷம் வரை வரவில்லை என்பதால் அந்த ஆர்டர் வேறு ஒருவருக்கு போய்விட்டது என்று சொல்கிறார். உடனே முத்து அந்த ஆடர் யார் எடுத்திருக்காங்க என்று கேட்கிறார், அதற்கு அந்த மேனேஜர் சிந்தாமணி தான் என்று சொல்கிறார்.
அத்துடன் சிந்தாமணி உறுதியாக சொன்னாங்க மீனா வரமாட்டாள் அதனால் இந்த ஆர்டரை நான் எடுத்துக் கொள்கிறேன் என்று சொல்லி வாங்கிட்டு போயிட்டாங்க என மேனேஜர் முத்துவுடன் சொல்கிறார். இதை கேட்டதும் முத்துவுக்கு சிந்தாமணி மீது சந்தேகம் வந்துவிட்டது. அத்துடன் செல்வம் கூறியது என்னவென்றால் மீனா பணத்தை எடுத்துட்டு வந்தது சிந்தாமணிக்கு எப்படி தெரிந்தது. இதில் வேறு ஒருவரும் சிந்தாமணிக்கு சப்போர்ட் பண்ணி இருக்கிறார் என்று சொல்கிறார்.
உடனே முத்து எல்லாரையும் கண்டுபிடிக்கணும் என்று முடிவெடுத்து விட்டார். பிறகு வீட்டிற்கு வந்த முத்து, கையில் அடிபட்டிருக்கும் மீனா பூக்கள் கட்டிக் கொண்டிருப்பதை பார்த்து மீனாவின் செயல்களுக்கு பாராட்டுகளை தெரிவிக்கும் விதமாக பூ வைத்து விளையாட ஆரம்பித்து விட்டார்கள். இவர்கள் இப்படி சந்தோசமாக இருப்பதை பார்த்து ரோகினி வைத்தெரிச்சலில் பொங்கி மனோஜிடம் காட்டுகிறார்.
அதற்கு மனோஜ் நாம் சிரித்து பேச முடியாது, நம்மளை பார்த்து சிரித்து பேசக்கூடிய நிலைமையில் தான் நீ என்னை ஆளாக்கி இருக்கிறாய் என்று திட்டி விடுகிறார். அடுத்ததாக ஸ்ருதி ரவி வீட்டிற்குள் நுழைந்ததும் மீனா முத்துவின் ஒற்றுமையை பார்த்ததும் அவர்களும் சேர்ந்து விளையாட ஆரம்பித்து விட்டார்கள். இதை எல்லாம் முடித்துவிட்டு முத்து, மீனாவின் பணம் எப்படி தொலைந்தது யார் காரணமாக இருப்பார்கள் என்பதை கண்டுபிடிக்கணும் என முடிவெடுத்து விட்டார்.
அந்த வகையில் சிஐடி ஆபிஸராக சிந்தாமணி வீட்டிற்கு போய் ரெய்டு பண்ண வேண்டும் என்று முத்து பிளான் போட்டு விட்டார். அதன்படி முத்து, சுருதி, செல்வம் மற்றும் ரவி அனைவரும் சேர்ந்து சிஐடி ஆபிஸராக வேஷம் போட்டு சிந்தாமணி வீட்டிற்கு போகிறார்கள். அந்த வகையில் சிந்தாமணிக்கு விரித்த வலையில் சிக்கி விஜயாவும் மாட்டிக் கொள்ளப் போகிறார்.