சுந்தர் சியை இயக்குனர் என்று கூறுவதை விட ஒரு மாயாவி என்று கூறலாம். வழக்கமாக தனக்கே உண்டான பாணியில் படங்களை சக்சஸ் செய்து, இன்றுவரை களத்தில் கலக்குகிறார். எப்பொழுதுமே கமர்சியல் கிங்காக வலம் வருபவர், இப்பொழுது கேங்கர்ஸ் படத்திலும் பட்டையை கிளப்பி இருக்கிறார். இந்தப் படத்தால் குட் பேட் அக்லி பட காட்சிகளை குறைத்து விட்டனர்.
கடந்த ஆண்டு இவர் இயக்கத்தில் உருவான அரண்மனை 4 ஆம் பாகம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. 100 கோடிக்கு மேல் வசூல் செய்து சுந்தர்சிக்கு செம பூஸ்ட் கொடுத்தது. இதை அடுத்து அரண்மனையின் அடுத்தடுத்த பாகங்களை எடுப்பதற்கும் தயாரானார். மொத்தமாக அந்த படம் 110 கோடிகள் வசூலை கொடுத்தது.
அடுத்த கட்டமாக ஏற்கனவே சுந்தர் சி இயக்கத்தில் 2013 ஆம் ஆண்டு உருவாகி பாதியில் நின்னு போன படம் மதகஜராஜா. இந்த படத்தில் விஷால், வரலட்சுமி போன்றவர்கள் நடித்திருந்தனர். இதையும் தூசி தட்டி வெளியிட்டார் சுந்தர் சி. திரும்பிய பக்கமெல்லாம் அதிர்ஷ்டம் தான் என்பது போல் மதகஜராஜா படமும் ஹிட் அடித்தது
வெறும் 16 கோடியில் எடுக்கப்பட்ட மதகஜராஜா படம் 60 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. ஒரே வருடத்தில் சுந்தர் சிக்கு அடுத்த ஹிட் என இந்த படம் அரண்மனையை 4 ஆம் பாகத்தின் வரிசையில் சேர்ந்தது. இப்படி தொடர்ந்து இரண்டு ஹிட் படங்கள் கொடுத்தவர் இப்பொழுதும் சாதித்துள்ளார்.
தற்சமயம் வடிவேலு கூட்டணியில் இவர் இயக்கிய படம் கேங்கர்ஸ். இந்த படம் ரிலீஸ் ஆன இரண்டே நாட்களில் 8 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்துள்ளது. தமிழ்நாட்டில் நான்கு கோடிகளும் , உலக அளவில் ஆறு கோடிகளும் வசூலித்துள்ளது. சனி, ஞாயிறு விடுமுறை என்பதால் இந்த இரண்டு நாட்கள் அதிக வசூல் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.