Mirchi Siva : வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் வெளியான சென்னை 600028 படத்தில் நடித்தவர் தான் மிர்ச்சி சிவா. இவருடைய தமிழ் படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. அதேபோல் தான் கலகலப்பு படமும் அமைந்தது.
ஆனால் சமீபகாலமாக அவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் பெரிய அளவில் ரசிகர்களை கவர தவறிகிறது. அந்த வகையில் சமீபத்தில் விடிவி கணேஷ், மிர்ச்சி சிவா ஆகியோர் நடிப்பில் சுமோ படம் வெளியானது.
இப்படம் பாக்ஸ் ஆபிஸில் படுதோல்வியை சந்தித்து உள்ளது. இந்த சூழலில் சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் தனது சமூக வலைத்தளத்தில் மிர்ச்சி சிவாவை பற்றி விமர்சித்து உள்ளார். அதாவது மிர்ச்சி சிவாவின் ஐந்தாவது தோல்வி படம் தான் சுமோ.
மிர்ச்சி சிவாவை எச்சரித்த பிரபலம்
ஒரே மாதிரியான நடிப்பு, வசனம், உச்சரிப்பு, மொக்கையான கதை தேர்வுகள் தான் அவரின் இந்த தோல்விக்கு காரணமாக இருக்கிறது. இதை மாற்றிக் கொள்ளவில்லை என்றால் இந்த தோல்வி பயணம் நிச்சயம் என்று மிர்ச்சி சிவாவை எச்சரித்து இருக்கிறார்.
ஆரம்பத்தில் உள்ள மாதிரி வித்தியாசமான கதைகளத்தை மிர்ச்சி சிவா தேர்ந்தெடுத்து நடித்தால் கண்டிப்பாக வெற்றி பெறலாம். இப்படியே போனால் இன்னும் இரண்டு மூன்று படங்களில் அவர் காணாமல் போய்விடுவார்.
அல்லது நல்ல படங்களில் செகண்ட் ஹீரோ வாய்ப்பு கிடைத்தால் கூட சினிமாவில் சில காலம் நீடிக்கலாம். பெரிய ஹீரோக்களே இப்போது வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து வரும் நிலையில் மிர்ச்சி சிவா இதைப்பற்றி கொஞ்சம் யோசிக்கலாம்.