Santhanam : சந்தானம் ஹீரோவாக இப்போது கலக்கிக் கொண்டிருக்கிறார். அவருடைய டிடி ரிட்டன்ஸ் படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இப்போது இதன் மூன்றாம் பாகமாக டிடி நெக்ஸ்ட் லெவல் என்ற படத்தில் நடித்திருக்கிறார்.
இந்தப் படம் வருகின்ற மே 16ஆம் தேதி ரிலீசுக்கு தயாராக உள்ளது. இந்த படத்தில் செல்வராகவன், மொட்டை ராஜேந்தர், இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் போன்ற பல பிரபலங்கள் நடிக்கின்றனர். இதில் சந்தானத்தின் அம்மாவாக 50 வயது நடிகை நடித்து உள்ளார்.
சந்தானத்திற்கு தற்போது 45 வயதாகிறது. இந்த சூழலில் டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தில் சந்தானத்தின் அம்மாவாக நடிகை கஸ்தூரி நடித்திருக்கிறார். ஆரம்பத்தில் சந்தானத்திற்கு அம்மாவா நடிக்க முடியாது என்று கூறியிருக்கிறார்.
சந்தானத்திற்கு அம்மாவாக நடிக்க மறுத்த நடிகை
அதன் பிறகு முழு கதையையும் கேட்டுவிட்டு சொல்லுங்கள் என்று இயக்குனர் கூறி இருக்கிறார். கதையை கேட்ட பிறகு அதில் உள்ள முக்கியத்துவம் அறிந்து கஸ்தூரி படத்தில் நடிக்க ஒத்துக் கொண்டாராம்.
இதை கஸ்தூரியே ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கூறி இருந்தார். முதல்முறையாக படத்தில் அம்மாவாக நடித்தது நல்ல அனுபவமாக இருந்தது என்றும் கூறியிருக்கிறார். மேலும் இந்த படத்திற்காக சந்தானம் ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கிறார்கள்.
அதோடு இப்போது பல வருடங்களுக்குப் பிறகு மீண்டும் சந்தானம் காமெடி கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். சிம்பு கேட்டதால் மறுப்பு தெரிவிக்க முடியாது என்பதால் மீண்டும் காமெடி கேரக்டரில் நடிப்பதாக சந்தானம் கூறியிருந்தார்.