கோதாவில் குதித்த அஜித், விஜய்க்கு ஏற்பட்ட தலைவலி.. எல்லாத்துக்கும் போட்டியா வந்தா எப்படி ஏகே!

Ajith Kumar: வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் என்ற கதையா போட்டின்னு வந்துட்டா கோதாவில் இறங்கி ஒரு கை பார்த்து விடுவார் போல அஜித்குமார்.

கால் வைக்கிற இடம் எல்லாம் கன்னிவெடி என்பது போல் விஜய்க்கு எந்த பக்கம் போனாலும் அஜித்தின் தாக்குதல் அதிகமாகவே இருக்கிறது.

நீங்கள் சினிமாவை பார்த்துக்கோங்க, நான் சமூகத்தை பார்த்துக்கிறேன்னு போட்டியிலிருந்து ஒதுங்கிக் கொண்டாலும் அப்போதும் விட்ட பாடு இல்லை.

எல்லாத்துக்கும் போட்டியா வந்தா எப்படி ஏகே!

பொதுவாக விஜய் நாட்டில் நடக்கும் பல பிரச்சினைகளுக்கு தற்போது குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறார். ஆனால் அஜித் தன்னை வெளியில் காட்டிக் கொள்வதையோ, தனக்கு சம்பந்தமில்லாத பொது பிரச்சனைகளை பேசுவதையோ விரும்ப மாட்டார்.

ஆனால் நேற்று பத்மபூஷன் விருதை வாங்கிய கையோடு செய்தி நிறுவனம் ஒன்றிற்கு பேட்டி அளித்திருக்கிறார்.

அதில் பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்திருக்கிறார். மேலும் உள்ளுக்குள்ளேயே அதிகபட்ச ஒற்றுமையுடன் நாம் இருக்க வேண்டும்.

மத்திய அரசு இதற்கான தகுந்த தீர்வு காணும் என நம்புகிறேன் என்று பேசி இருக்கிறார்.

இதுவரை எந்த விஷயத்திற்குமே கருத்து தெரிவிக்காத அஜித் தற்போது இது பற்றி பேசி இருப்பது விஜய்க்கு போட்டியாக அவர் களமிறங்கி இருக்கிறார் என்பது போல் இருக்கிறது.