Vijay: விஜய் அரசியல் பணிகளில் தீவிரமாக ஈடுபட தொடங்கி விட்டார். கடந்த வாரம் அவர் கட்சியின் முதல் பூத் கமிட்டி மாநாடு கோவையில் நடைபெற்றது.
இரு நாட்கள் நடந்த மாநாட்டில் தளபதிக்கு சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது. விமான நிலையத்திலிருந்து திறந்த வேனில் ரோடு ஷோ நடந்தது.
அப்போது மக்கள் தொண்டர்கள் ரசிகர்கள் என அனைவரும் ஆரவாரம் செய்து அவருக்கு வரவேற்பு கொடுத்தனர். அதில் ரசிகர்கள் ஒரு படி மேலே போய் வேனில் ஏறி சேட்டை செய்த சம்பவங்களும் நடந்தது.
ரோடு ஷோவுக்கு தயாராகும் விஜய்
அதேபோல் இளைஞர்கள் குழந்தைகள் தொடங்கி குடும்பங்கள் வரை அனைவரும் கருத்தரங்கு நடைபெற்ற காலேஜுக்கு வந்ததும் குறிப்பிடத்தக்கது. அதை அடுத்து மதுரையில் இரண்டாவது பூத் கமிட்டி மாநாடு நடைபெற இருக்கிறது.
அதற்காக மதுரையிலிருந்து கொடைக்கானல் செல்லும் வழியில் இடம் பார்க்கும் பணிகள் தற்போது தொடங்கியுள்ளது. மே முதல் வாரத்தில் இந்த நிகழ்வு நடக்கும் என உறுதியான தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனால் மதுரைவாசிகள் தற்போது தளபதியை வரவேற்க தயாராகிவிட்டனர். ஏற்கனவே நடந்த ரோடு ஷோ அரசியல் வட்டாரத்தில் அதிர்வை ஏற்படுத்தி இருந்தது.
அதை அடுத்து மதுரையும் அதிரும் என்பதில் சந்தேகம் இல்லை. பாசக்கார மதுரை மக்கள் விஜய்க்கு எப்படி வரவேற்பு கொடுக்கிறார்கள் என்பதை விரைவில் காண்போம்.