சுந்தர் சி மற்றும் வடிவேலு கூட்டணியில் கேங்கர்ஸ் படம் கடந்த வாரம் ரிலீஸ் ஆனது. எப்பொழுதுமே தனக்கு உண்டான கமர்சியல் பாணியில் ஒரே மாதிரியான படங்களை எடுக்கும் மேஜிசியன் இவர். இப்பொழுதும் அதேபோல் படத்தையும் எடுத்து ஹிட் அடித்துள்ளார். ஃபேமிலி ஆடியன்ஸ் இந்த படத்தை கொண்டாடி வருகிறார்கள்.
ஏற்கனவே இதற்கு முன்னர் அரண்மனை 3, மதகஜராஜா, இப்பொழுது கேங்கர்ஸ் என அடுத்தடுத்து இவர் படங்கள் தொடர்ந்து வசூல் வேட்டை ஆடி வருகிறது. இந்த படமும் ஹிட் அடித்து விட்டால் ஹாட்ரிக் வெற்றியை ருசித்த பெருமை சுந்தர்சியை சேரும். இதனால் இந்த படத்தின் தயாரிப்பாளர் டபுள் ஹேப்பி மூடில் இருக்கிறாராம்.
வரிசையாக சுந்தர் சி யின் படங்களை தயாரிப்பது எல்லாமே ஏ சி சண்முகம் தான். தொடர்ந்து இவருக்கு பல வெற்றிகளை கொடுத்து வேற லெவலில் ஜாக்பாட்டை கொடுத்துள்ளார். இதனால் ஹேப்பியான தயாரிப்பாளர் ஏசி சண்முகம் சுந்தர்சி மற்றும் குஷ்புவை அழைத்து அவர்களுக்கு ஒரு டூரிஸ்ட் ஆஃபர் கொடுத்துள்ளார்.
அரண்மனை 3 அண்ட் 4, காபி வித் காதல், மதகஜராஜா, இப்பொழுது கேங்கஸ் போன்ற ஐந்து சுந்தர்சியின் படங்களையும் தயாரித்தது ஆன்லஏ சி சண்முகம் தான். இதில் காபி வித் காதலை தவிர மற்ற எல்லா படங்களுமே நல்ல வசூலை கொடுத்து பாக்ஸ் ஆபிஸை தெறிக்கவிட்டுள்ளது. இதனால் கொள்ளை லாபம் பார்த்துள்ளார் தயாரிப்பாளர்.
இந்த சந்தோசத்தை இயக்குனரும் அனுபவிக்க வேண்டும் என சுந்தர் சி யின் குடும்பத்திற்கு 25 நாட்கள் ஐரோப்பிய நாட்டிற்கு சுற்றுலா பேக்கேஜ் கொடுத்துள்ளார். மொத்த செலவும் தயாரிப்பாளர் ஏசி சண்முகம் பார்த்துக் கொள்கிறாராம். அதனால் இந்த மே மாதம் முழுவதும் சுந்தர் சி வேலைகளை ஒத்தி வைத்து விட்டு டூர் செல்கிறார்.