Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், மீனாவிடம் இருந்து திருடிய பணத்தை முத்து பிளான் பண்ணி சிந்தாமணி இடம் இருந்து பணத்தை வாங்கி மீனாவிடம் கொடுத்து விட்டார். அத்துடன் வீட்டிற்கு வந்து மீனாவிற்கு பணம் கிடைத்ததும், சிந்தாமணி வீட்டிற்கு ஆபிஸராக போயி பணத்தை எடுத்த விஷயத்தை முத்து வீட்டில் இருப்பவர்களிடம் சொல்கிறார்.
உடனே எல்லோரும் மீனாவை பாராட்டிய நிலையில் அண்ணாமலை, சிந்தாமணிக்கு உதவியது விஜயா தான் என்று சந்தேகப்பட்டு திட்டுகிறார். ஆனாலும் விஜயா கொஞ்சம் கூட குற்ற உணர்ச்சியே இல்லாமல் மீனாவை தான் திருப்பி திட்டுகிறார். பிறகு சுருதி மற்றும் ரவி ஹோட்டலில் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது அந்த ஹோட்டலில் பிரபலர் ஒருவர் ரிவ்யூ போடுவதற்காக வருகிறார்.
அவரை எப்படியாவது நல்ல ரிவ்யூ கொடுக்க வைக்க வேண்டும், அப்படி அவர் நல்ல ரிவ்யூ கொடுத்து விட்டால் நம்மளுடைய ஹோட்டலுக்கு நல்ல பெயர் கிடைத்துவிடும் என்று நீத்து, ரவி மற்றும் சுருதியிடம் சொல்கிறார். உடனே அதற்கான வேலைகள் எல்லாத்தையும் பார்க்கும் பொழுது மீனா அங்கே வருகிறார். அப்பொழுது சுறுதி என்ன திடீரென்று ஹோட்டலுக்கு வந்து இருக்கீங்க என்று கேட்கும் பொழுது எனக்கு பணம் திருப்பி கிடைத்ததற்கு முக்கிய காரணம் நீங்களும் ரவியும் தான்.
அதனால் தான் வாழைப்பூ வடை, மற்றும் இனிப்பு கொண்டு வந்து கொடுத்திருக்கிறேன் என்று பார்சலை சுருதியிடம் கொடுத்துவிட்டு போகிறார். உடனே ஸ்ருதி மற்றும் ரவி அதை சாப்பிட்டு பார்த்து நன்றாக இருக்கிறது என்று சொல்லி வருகிற பிரபலத்துக்கு அதை வைத்து விடலாம் என்று சொல்லி அதையும் கொடுக்கிறார்கள். உடனே அவர் சாப்பிட்டு பார்த்து எல்லாமே சூப்பராக இருக்கிறது என்று வாழைப்பூ வடை மற்றும் இனிப்பையும் ஹைலைட் பண்ணி பேசி விடுகிறார்.
இதனால் நீத்து ரொம்பவே சந்தோஷப்பட்டு சுருதி மற்றும் ரவிக்கு சன்மானமாக பத்தாயிரம் ரூபாய் பணத்தை கொடுக்கிறார். உடனே இவர்கள் வீட்டிற்கு போய் மீனாவை கூப்பிட்டு பாராட்டி அந்த பணமே உங்களால் தான் வந்தது நீங்களே வைத்துக் கொள்ளுங்கள் என்று பணத்தை கொடுக்கிறார்கள். ஆனால் மீனா நீங்க பண்ண உதவிக்கு என்னுடைய சந்தோஷத்தை காட்டும் விதமாக இனிப்பு பண்ணி தான் கொடுத்தேன்.
இந்த பணம் எனக்கு வேண்டாம் என்று சொல்லிய நிலையில் மீனா நீங்கள் கொடுத்த சாப்பாடு ரொம்பவே அருமையாக இருந்தது. அத்துடன் இதனால் எங்க ஹோட்டலுக்கும் நல்ல ரிவ்யூ கிடைத்திருக்கிறது, அதனால் இந்த பணம் உங்களுக்கு தான் என்று சொல்லிய நிலையில் மீனா அப்படி என்றால் கொஞ்சம் போதும் என்று பாதி பணத்தை லாபமாக பெற்றுக்கொள்கிறார்.
இதை எல்லாம் பார்த்த ரோகினி மனோஜ் மற்றும் விஜயா வைத்தெரிச்சல் பட ஆரம்பித்து விட்டார்கள். அடுத்ததாக விஜயா, பார்வதி வீட்டிற்கு சென்று ரோகிணி பண்ணிய துரோகத்தை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அதனால் ரோகிணியை இப்படியே விட்டு விட முடியாது என் பையனையும் அவளையும் பிரித்து காட்டணும். அதற்கு உனக்கு தெரிந்த மாந்திரீகம் பண்றவங்க யாராவது இருந்தா சொல்லுங்க என பேசிக்கொள்கிறார்.
அப்பொழுது அங்கே எதார்த்தமாக வந்த ரோகினி வாசலில் நின்று விஜயா பேசுவது எல்லாத்தையும் கேட்டு விடுகிறார். அத்துடன் இனி இந்த மாமியாரையும் சும்மா விட்டு வைக்க கூடாது என்று கோபத்தில் விஜயாவுக்கு ஆப்பு வைக்கும் விதமாக ரோகிணி, கல்யாணியாக மாறி சூழ்ச்சி பண்ணி மனோஜ் மற்றும் விஜயாவை நிரந்தரமாக பிரிக்கப் போகிறார். அப்பொழுதுதான் விஜயாவுக்கு மீனா மற்றும் முத்துவின் அருமை புரியவரும்.