Ajith-Shalini: நடிகரும் ரேஸ் வீரருமான அஜித்துக்கு மத்திய அரசு பத்மபூஷன் விருதை அறிவித்தது. அதை அடுத்து சில தினங்களுக்கு முன்பு அவருக்கு குடியரசு தலைவர் கையால் விருதும் வழங்கப்பட்டது.
இதற்கு ரசிகர்களும் பிரபலங்களும் வாழ்த்து கூறி வருகின்றனர். அதே சமயம் அஜித் விருது வாங்கிய பின் கொடுத்திருந்த பேட்டியும் தற்போது வைரலாகி வருகிறது.
அதில் அவர் இந்த விருது தனக்கு கிடைத்ததற்கு ரசிகர்களுக்கும் குடும்பத்தினருக்கும் நட்பு வட்டாரங்களுக்கும் நன்றி தெரிவித்தார்.
பத்மபூஷன் விருது வாங்கிய அஜித்தின் வைரல் பேட்டி
அதைத்தொடர்ந்து தன் மனைவி ஷாலினி பற்றியும் உருக்கமாக பேசியிருந்தார். அதில் என்னை திருமணம் செய்வதற்கு முன்பு ஷாலினி பிரபல நடிகையாக இருந்தார்.
ரசிகர்கள் அனைவருக்கும் அவரை பிடிக்கும் ஆனால் திருமணத்திற்கு பிறகு எனக்காக சினிமாவை விட்டு விலகினார். அது சாதாரண விஷயம் கிடையாது.
அதேபோல் சில சமயங்களில் நான் தவறான முடிவு எடுத்து விடுவேன். அப்போது கூட அவர் எனக்கு உறுதுணையாக இருந்தார். இந்த விருதும் பாராட்டுக்களும் மொத்தமாக அவருக்கு தான் சேர வேண்டும் என்று கூறியுள்ளார்.
ஏற்கனவே துபாயில் நடைபெற்ற கார் ரேசின் போது அஜித் ஷாலினி தான் இந்த பெருமைக்கு காரணம் என வெளிப்படையாக தெரிவித்து இருந்தார். அதற்கு நன்றியும் கூறி இருந்தார்.
அதைத்தொடர்ந்து மீண்டும் அவர் தன் காதல் மனைவியை பெருமைப்படுத்தி இருக்கிறார். இதை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.