YouTuber Irfan : யூடியூபர் இர்ஃபான் சில காலமாக பல சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். வெளிநாடுகள் சென்று பல ஹோட்டல்களில் உணவை ருசித்து ரிவ்யூ போடுபவர் தான் இர்ஃபான். மிகக் குறுகிய காலத்திலேயே அதிக சப்ஸ்க்ரைபர் பெற்றார்.
அதுவும் குறிப்பாக சினிமா மற்றும் அரசியலில் உள்ள முக்கிய பிரபலங்களுடன் உணவு சாப்பிட்டு வீடியோக்கள் போட்டார். அந்த வீடியோக்கள் ஹிட்டானது மட்டுமல்லாமல் அவர்களுடன் நட்பும் பாராட்டி வருகிறார்.
இந்த சூழலில் கடந்த சில மாதங்களுக்கு முன் இர்ஃபான் கார் விபத்துக்குள்ளானது. இதில் ஒரு பெண் பலியானது பரபரப்பை ஏற்படுத்தியது. இதை அடுத்து தனது மனைவியின் வயிற்றில் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என்று சொல்லி சர்ச்சையை கிளப்பி இருந்தார்.
ஒரு மாதம் கழித்து மன்னிப்பு கேட்ட இர்ஃபான்
இதையடுத்து குழந்தையின் தொப்புள் கொடியை அவரே வெட்டியது மீண்டும் பிரச்சனையை ஏற்படுத்தியது. இவ்வாறு அடுத்தடுத்த பிரச்சினைகள் சந்தித்து வந்த நிலையில் சமீபத்தில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு சாலை ஓரங்களில் இருக்கும் மக்களுக்கு பணம், துணி ஆகியவற்றை கொடுத்தனர்.
அப்போது அவரது மனைவியும் உடன் இருந்த நிலையில் சிலர் முந்தியடித்துக் கொண்டு அவற்றை வாங்கும்போது இர்ஃபான் தரைக்குறைவாக பேசி இருந்தார். இந்த வீடியோ கடும் கண்டனத்தை சந்தித்த நிலையில் பொத்தாம் பொதுவாக மன்னிப்பு கேட்டிருந்தார்.
ஆனால் அந்த வீடியோவுக்கு பிறகு இர்ஃபான் சேனலில் சப்ஸ்கிரைப்ர்கள் குறைய ஆரம்பித்துவிட்டனர். அவரது வீடியோவின் பார்வையாளர்கள் குறைந்த நிலையில் ஒரு மாதம் கழித்து அந்த வீடியோவுக்கு மன்னிப்பு கேட்டிருக்கிறார்.