ஸ்ருதி கொடுத்த ஐடியா.. விஜயாவை மறுபடியும் ஏமாற்றும் ரோகினி

Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், திறமை இருந்தால் நிச்சயம் நம்மை தேடி வாய்ப்புகள் வரும் என்பதற்கு சிறந்த உதாரணமாக தான் மீனா இருக்கிறார். அதாவது படிக்காமல் ஏழை வீட்டில் இருந்து விஜயா வீட்டுக்கு மருமகளாக வந்தாலும் அங்கே கிடைக்க வேண்டிய மதிப்பும் மரியாதையும் இல்லாமல் ஒரு வேலைக்காரி போல தான் மீனா எடுபிடி வேலை பார்த்து வருகிறார்.

ஆனால் அவருக்கு கிடைத்த கணவர் போல் அமைந்தால் எதை வேண்டுமானாலும் மாற்றி வெற்றி பெற முடியும். அந்த வகையில் மீனாவுக்கு தெரிந்த பூ கட்டுவதன் மூலம் நடமாடும் பூக்கடை வியாபாரத்தை பண்ணி வந்தார். இதில் அடுத்த கட்டத்தின் வெற்றியாக பங்க்ஷனில் நடக்கும் மண்டபத்திற்கு டெக்ரேசன் ஆர்டரையும் எடுத்து அதிலும் லாபம் பார்த்து வருகிறார்.

தற்போது சமையல் விஷயத்திலும் சிறப்பை கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் சமைக்கும் உணவுகளிலும் பிரம்மாதம் என்று பாராட்டும் அளவிற்கு மீனாவின் கைப்பக்குவம் அமைந்து வருகிறது. அதனால் தான் சுருதி மற்றும் ரவிக்கு செய்து கொடுத்த வடை மற்றும் பாயாசத்தின் மூலமும் மீனாவிற்கு ஒரு லாபம் கிடைத்துவிட்டது.

அத்துடன் சுருதி மற்றும் ரவி, மீனாவை பாராட்டும் வகையில் ஒரு பக்கம் பூ கட்டும் பிசினஸ் இன்னொரு பக்கம் சமையல் பிசினஸையும் கையில் எடுத்துக்கோங்க என்று ஐடியா கொடுக்கிறார்கள். இதையெல்லாம் பார்த்து வயிற்றெச்சலில் மனோஜ் விஜயா பொறாமைப்படுகிறார்கள். அப்பொழுது விஜயா, ரோகினியை தாக்கும் விதமாக ஒருத்தி 300 கோடி 400 கோடின்னு பொய் சொல்லி தற்போது தெருக்கோடியில் தான் நிற்க வைத்து இருக்கிறார்.

அதுக்கு மீனா ஏதோ பூ காட்டுகிறேன் சமையல் பண்றேன்னு பணம் சம்பாதிப்பது பரவாயில்லை என்று சொல்லி விடுகிறார். அடுத்ததாக மொட்ட மாடியில் அண்ணன் தம்பிகள் மூன்று பேரும் பேசிக் கொண்டிருக்கும் பொழுது மனோஜ்க்கு அட்வைஸ் பண்ணும் விதமாக எல்லா நேரத்திலும் அம்மா பேச்சைக் கேட்க வேண்டும் என்று அவசியம் இல்லை.

உன்னை நம்பி வந்த உன் மனைவியையும் நினைத்துப் பார், ரோகிணி அண்ணி உன்னை பற்றி தெரிந்தும் உன் மீது இருந்த காதலால் பொய் சொல்லி இருக்கிறார். அதனால் ரோகிணி அண்ணியிடம் பேசாமல் இருக்காத, அவங்க தான் கடைசிவரை உன் கூட நின்னு சப்போர்ட் பண்ணுவாங்க என்று அட்வைஸ் பண்ணுகிறார்.

அடுத்ததாக அடுப்பங்கரையில் சுருதி மீனா மற்றும் ரோகிணி மூன்று பேரும் பேசிக் கொண்டிருக்கும் பொழுது விஜயா மனசில் இடம் பிடிப்பதற்கு ரோகிணிக்கு ஸ்ருதி ஐடியா கொடுக்கிறார். அதாவது மாமியாரை பொறுத்தவரை மாந்திரீகம் மந்திரவாதி சாமியார் இதில் அதிக நம்பிக்கை இருக்கிறது. அதனால் பார்வதி அத்தை இடம் சொல்லி ஒரு சாமியாரை வரவழைத்து மூத்த மருமகள் மூலமாக தான் உங்களுக்கு எல்லாம் நல்லது நடக்கும் என்று சும்மா பொய் சொல்ல சொல்லுங்க.

அதன்படி மாமியாரும் உங்க மீது இருக்கும் கோபத்தை எல்லாம் மறந்துவிட்டு பழைய மாதிரி உங்களிடம் பேச ஆரம்பித்து விடுவாங்க என்று ஐடியா கொடுக்கிறார். உடனே ரோகிணி, நான் ஒரு தடவை பொய் சொன்னதே போதும் மறுபடியும் நான் ஏமாற்ற விரும்பவில்லை என்று நல்லவள் மாறி பேசி மீனா உண்மை சொன்னதற்காக கோபப்பட்டு சண்டை போடுகிறார்.

பிறகு பார்வதி வீட்டிற்கு ரோகினி பேசுவதற்காக போகிறார். அதே நேரத்தில் அங்கே விஜயாவும் போனதால் ரோகிணி விஜயா கண்ணில் படாமல் ஒரு ரூமுக்குள் ஒளிந்து விடுகிறார். அப்பொழுது பார்வதியிடம் மனோஜ் ரோகினியையும் பிரிக்க வேண்டும் அதற்குத் தெரிந்த மந்திரவாதியை கூட்டிட்டு வா என்று சொல்வதை ரோகினி கேட்டுக் கொள்கிறார்.

உடனே விஜயா போனதும் பார்வதியிடம் ரோகிணி, என்னையும் மனோஜையும் பிரிப்பதற்கு என்னமா யோசிக்கிறாங்க. இனியும் இப்படியே விட்டால் சரிப்பட்டு வராது என்று சொல்லி அதே மந்திரவாதி மூலம் சுருதி சொன்ன மாதிரி பொய் சொல்லி விஜயா மனதில் இடம் பிடிக்கலாம் என்று மறுபடியும் விஜயா காதில் பூசுத்தி ஏமாற்றுவதற்கு ரோகிணி தயாராகி விட்டார்.