லோகேஷ் கனகராஜ் கூலி படத்தை முழுவதுமாக முடித்துவிட்டார். இனிமேல் போஸ்ட் ப்ரொடெக்ஷன் வேலைகள் தான்பாக்கி இருக்கிறது என்று சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில் கூறியுள்ளார். மாநகரம் பட நடிகர் ஸ்ரீயை பற்றியும் அவரிடம் பல கேள்விகளை கேட்டனர்.
லோகேஷ் கனகராஜ், ஸ்ரீ நல்லா இருக்கிறார் இப்போதைக்கு அது மட்டும் தான் சொல்ல முடியும் என மறுத்துவிட்ட, கூலி படத்தின் அப்டேட்டை கூறியுள்ளார். படத்தை முடித்து ரஜினிக்கு ஓய்வு கொடுத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளார். இப்பொழுது ரஜினி அடுத்த பட வேலைகளில் பிஸியாக இறங்கிவிட்டார்.
நெல்சன் இயக்க உள்ள ஜெயிலர் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிப்பதற்காக ரஜினிகாந்த் அண்மையில் கேரளா சென்றுள்ளார். அங்கே அவரது ரசிகர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு கொடுத்தனர். அவர்களுடன் போட்டோ எடுத்து மகிழ்ந்தார் ரஜினிகாந்த். இந்நிலையில் ஜெய்லர் 2வில் முக்கியமான மாஸ் பிரபலம் ஒருவர் இணைய உள்ளார்.
சிவராஜ் குமார், மோகன்லால் போன்றவர்கள் முதல் பாகத்தைப் போலவே இரண்டாம் பாகத்திலும் கலக்கவிருக்கிறார்கள். ரஜினிக்கு இணையாக அவர்களுக்கும் நிறைய காட்சிகள் ஒதுக்குமாறு கூறியுள்ளார் சூப்பர் ஸ்டார். இப்பொழுது போலீஸ் உயர் அதிகாரியாக சூப்பர் நடிகர் ஒருவரும் நடிக்க உள்ளாராம்.
சமீபத்தில் பத்மபூஷன் விருது வாங்கிய நடிகர் பாலகிருஷ்ணா ஜெய்லர் 2 படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தை இந்த ஆண்டு தீபாவளி அல்லது அடுத்த பொங்கலுக்கு எதிர்பார்க்கலாம் என ஏற்கனவே அறிவித்திருந்தார் நெல்சன். பாலையா நடிப்பதற்கு முன்பு ரஜினியின் நண்பர் சிரஞ்சீவி இடம் அந்த கதாபாத்திரம் நடிக்க கேட்டுள்ளனர். ஆனால் அவரால் நடிக்க முடியாத சூழ்நிலையால் இப்பொழுது பாலையாவின் மாஸ் காட்சிகளை காணலாம்.