Serial: சீரியல் என்றாலே அது சன் டிவி தான் என்று எல்லோரும் சன் டிவிக்கு முக்கியத்துவம் கொடுத்த நிலையில் தற்போது கொஞ்ச நாட்களாகவே சன் டிவியில் உள்ள சீரியல்கள் பார்க்கும் படியாக இல்லாமல் இருக்கிறது. ப்ரைம் டைமிங் இல் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களும் சரி மற்ற சீரியல்களும் சரி மோசமான விமர்சனங்களை பெற்று வருகிறது.
அதிலும் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் வந்த ஒரு சீரியல் பட்டித் தொட்டியில் எல்லாம் பறந்து எல்லோரும் ரசிக்கும்படியாக நல்ல விமர்சனங்களை கொடுத்து வந்தார்கள். ஆனால் எப்பொழுது அந்த சீரியலின் கதாநாயகன் காணாமல் போனாரோ அப்பொழுதே அந்த சீரியல் தடம் புரண்டு போய்விட்டது.
இதனால் கொஞ்சம் கொஞ்சமாக சரிவை சந்தித்த அந்த சீரியலை திடீரென்று முடித்து விட்டார்கள். இருந்தாலும் மக்களின் வேண்டுகோளின் படி மறுபடியும் அந்த சீரியல் புதுசாக வர ஆரம்பித்தது. அப்படி வந்து சீரியல் தான் எதிர்நீச்சல் தொடர்கதை இரண்டாம் பாகம்.
ஆனால் தற்போது வருகிற கதை எல்லாம் பார்க்கும் பொழுது வாய்க்கு வந்தபடி இயக்குனரையும் கதையையும் திட்டும் அளவிற்கு மோசமான விமர்சனங்களை பெற்று வருகிறது. அந்த அளவிற்கு தான் எதிர்நீச்சல் நாடகம் பார்ப்பவர்களை டென்ஷன் படுத்துகிறது.
பொழுதுபோக்குக்காக நாடகத்தை பார்க்கலாம் என்று உட்கார்ந்தால் அந்த நாடகமே நமக்கு மிகப்பெரிய தலைவலியாக மாறுகிறது என்று கமெண்ட் பண்ணி எதிர்நீச்சல் சீரியலை முடிக்க சொல்லி சன் டிவி சீரியலுக்கு வேண்டுகோள் வைத்து வருகிறார்கள்.
அத்துடன் இந்த சீரியலில் முதல் பாகத்தில் ஜனனி கேரக்டரில் நடித்த மதுமிதா இரண்டாம் பாகத்தில் நல்ல வேலை தொடரவில்லை. அதற்கு பதிலாக சன் டிவி சீரியலில் இருந்து தப்பித்து விஜய் டிவியில் அய்யனார் துணை சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்து இருக்கிறது.
ஏனென்றால் தற்போது அய்யனார் துணை சீரியல் தான் விஜய் டிவியின் பில்லர் ஆக வெற்றி பெற்று வருகிறது. இதில் மதுமிதாவிற்கு நிலா கதாபாத்திரம் கிடைத்தது மிகப்பெரிய ஜாக்பாட் தான் என்று ரசிகர்கள் பலரும் மதுமிதாவிற்கு பாராட்டுகளை தெரிவித்து வருகிறார்கள்.
ஆனால் எதிர்நீச்சல் சீரியலில் தற்போது மாட்டிக்கொண்டு நடித்து வரும் கதாபாத்திரங்கள் அனைவருமே பெரிய பெரிய ஆர்டிஸ்ட்கள் மற்றும் அனுபவசாலிகள் தான். அவர்களை வைத்து கூட ஒரு நாடகத்தை உருப்படியாக கொண்டு போக முடியாமல் இயக்குனர் கதையை சொதப்பிக்கொண்டு, எங்கு ஆரம்பித்தோம் எதை நோக்கி போகிறோம் என்பதை மறந்து சீரியலை கொடுக்கிறார்.
இதற்கு பேசாமல் இந்த சீரியலை முடித்துவிட்டு வேறு ஏதாவது ஒரு சீரியலை கொண்டு வந்தால் நன்றாக இருக்கும் என மக்கள் விமர்சனங்களை கொடுத்து வருகிறார்கள்.