Lokesh Kanagaraj: மாநகரம் படத்தின் மூலம் கவனம் ஈர்த்த ஸ்ரீ சமீபத்தில் வெளியிட்ட புகைப்படங்கள் பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருந்தது. ஆள் அடையாளம் தெரியாத அளவுக்கு மெலிந்து போய் மோசமான வீடியோக்கள் போட்டிருந்தார்.
சினிமாவில் வாய்ப்பு கிடைக்காமலும், தயாரிப்பாளர்கள் ஏமாற்றியதாலும் இந்த நிலைக்கு ஸ்ரீ சென்றதாக கூறப்பட்டது. மேலும் லோகேஷ் கூட இவரை கண்டு கொள்ளவில்லையா என பலரும் கேள்வி எழுப்பி இருந்தனர். சமீபத்தில் லோகேஷ் தனது சமூக வலைத்தளத்தில் ஒரு பதிவு போட்டிருந்தார்.
அதாவது தற்போது ஸ்ரீ இருக்கும் இடத்தை கண்டுபிடித்து அவரை அழைத்து வந்து மருத்துவ சிகிச்சை கொடுக்கப்படுகிறது. அவரைப் பற்றி எந்த தவறான செய்தியையும் பரப்ப வேண்டாம் என்று கேட்டுக் கொண்டிருந்தார். இந்நிலையில் சமீபத்தில் பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்து கொண்டு லோகேஷ் ஸ்ரீயை பற்றி பேசியிருக்கிறார்.
ஸ்ரீயின் உடல்நிலை குறித்து பேசிய லோகேஷ்
அடுத்ததாக என்ன படம் பண்ண போகிறீர்கள் என்று பேட்டியாளர் கேட்டிருந்தார். அதற்கு ஒரே வேலையை திரும்பத் திரும்ப செய்து ரொம்ப மன அழுத்தம் ஆகிவிட்டது. அதோடு மட்டுமல்லாமல் சமீபத்தில் ஸ்ரீயின் உடல்நிலை ரொம்ப பாதித்துவிட்டது.
ஆகையால் சிறிது காலம் சினிமாவில் பிரேக் எடுத்துவிட்டு மீண்டும் படங்கள் இயக்குவேன் என்று லோகேஷ் கூறியிருக்கிறார். மேலும் ஸ்ரீ குறித்து பேசிய லோகேஷ் அவர் இப்போது சிகிச்சையில் இருக்கிறார்.
ஸ்ரீ மிக விரைவில் பழையபடி மாறுவார் என்று நம்பிக்கையுடன் லோகேஷ் கூறியிருக்கிறார். இதைக் கேட்டு ஸ்ரீயின் ரசிகர்கள் இப்போது சற்று ஆறுதல் அடைந்துள்ளனர். அவர் மீண்டும் நல்லபடியாக வரவேண்டும் என்று பிரார்த்திக்கின்றனர்.