உதயநிதி போட்ட பக்கா பிளான்.. ஜனநாயகனுக்கு ஏற்பட்ட சிக்கல்

Vijay: விஜய் தற்போது ஜனநாயகன் படத்தின் படப்பிடிப்பை மதுரையில் முடித்துவிட்டு கொடைக்கானல் செல்கிறார். அவரின் வாகனத்தின் பின்னால் ரசிகர்கள் முந்தியடித்துக் கொண்டு வருவதால் யாரும் தன்னை பின் தொடர வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார்.

விஜய்யின் கடைசி படம் தான் ஜனநாயகன் என்பதால் எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது. அரசியலில் விஜய் இறங்குவதால் அவருக்கு பல வழிகளில் குடைச்சல்கள் வருவதாக வெளிப்படையாகவே விஜய் பல மேடைகளில் கூறியிருக்கிறார்.

அந்த வகையில் விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு உதயநிதியால் பிரச்சனை வர இருப்பதாக சவுக்கு சங்கர் பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார். அதாவது உதயநிதியின் ரெட் ஜெயன்ட் நிறுவனத்தின் பினாமியாக செயல்பட்டு வருகிறது ரோமியோ பிக்சர்ஸ்.

ஜனநாயகன் படத்திற்கு உதயநிதியால் ஏற்பட்ட சிக்கல்

இதனால் ஜனநாயகன் படத்தை ரோமியோ பிக்சர்ஸ் வாங்கி, படம் வெற்றி பெற்றாலும் நஷ்டத்தை அடைந்ததாக சொல்வார்கள். ஏனென்றால் விஜய்க்கு வியாபாரம் இல்லை என்ற காட்டுவதற்காக இவ்வாறு செய்ய உள்ளனர்.

அதோடு விஜய்யின் கடைசி படத்தை தோல்வி படமாக மாற்றுவார்கள். அதேபோல் தான் விஜய்யின் வாரிசு மற்றும் அஜித்தின் வலிமை படங்கள் ஒன்றாக வெளியானது. இதில் வாரிசு படத்திற்கு கம்மியான தியேட்டர்கள் மட்டுமே ஒதுக்கி இருந்தனர்.

இவ்வாறு விஜய்யை வீழ்த்துவதற்காக உதயநிதி சதி செய்வதாக சவுக்கு சங்கர் கூறியிருக்கிறார். அவர் பேசியது இப்போது அஜித் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.