Eleven : ராட்சசன் போன்ற சீரியல் கில்லர் படங்கள் தமிழ் சினிமாவில் அதிகம் வந்து கொண்டே தான் இருக்கிறது. அதில் ஒரு சில படங்கள் நம்மை சீட்டில் நுனிக்கு வரச் செய்யும் அளவுக்கு திகில் நிறைந்ததாக உள்ளது.
அவ்வாறு தான் சமீபத்தில் லெவன் படத்தின் டிரைலர் வெளியாகி இருந்தது. லோகேஷ் அஜில்ஸ் இயக்கத்தில் நவீன் சந்திரா நடிப்பில் லெவன் படம் உருவாகி இருக்கிறது. இந்த படத்தின் டிரைலரை அண்மையில் கமலஹாசன் வெளியிட்டிருந்தார்.
இந்த படத்தில் பல ட்விஸ்டுகள் இருப்பது ட்ரைலரை வைத்து பார்க்கும் போது தெரிகிறது. அடுத்தடுத்து நடக்கும் மர்ம கொலைகளுக்கான காரணம் என்ன என்று போலீஸ் அதிகாரி துப்புத் துளைக்கிறார். ஒவ்வொரு முறையும் சைக்கோ கில்லரை கண்டுபிடிக்கும் போது தோல்வியை தழுவுகிறார்.
அச்சத்தில் ஆழ்த்திய லெவன் படம்
ஒரு கட்டத்தில் கொலையாளிக்கு இருள் அல்லது இரவு பற்றி பயம் இருப்பதை போலீஸ் அதிகாரி கண்டுபிடிக்கிறார். அந்த விஷயம் கொலையாளியை கண்டுபிடிக்க பெரிதும் உதவுகிறதா என்பது தான் லெவன் படத்தின் கதை.
படத்தில் ஒரு கொடூரமான கொலைகாரன் எவ்வாறு கொலைகளை செய்கிறான், அதற்கான காரணம் என பல சஸ்பென்ஸ்கள் அடங்கி இருக்கிறது. இதில் அபிராமி ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
மேலும் கிரைம் படத்திற்கு ஏற்றவாறு டி இமான் இசையமைத்திருக்கிறார். கார்த்திக் அசோகன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்போது லெவன் படத்தின் டிரைலர் வெளியான நிலையில் படத்தை பார்க்கும் ஆர்வம் ரசிகர்களுக்கு அதிகமாகி இருக்கிறது.