Kollywood cinema: கடந்த வருட தொடக்கத்தில் வெளிவந்த எந்த படங்களும் பெரிய அளவில் வசூல் செய்யவில்லை. இரண்டாம் பாதியில் தான் தமிழ் சினிமா கொஞ்சம் தலைநிமிர்ந்தது என்று சொல்லலாம்.
ஆனால் இந்த வருடம் ஆரம்பத்தில் நல்லதொரு தொடக்கமாக இருந்தது. அதில் வாராவாரம் ஏகப்பட்ட படங்கள் வந்து கொண்டிருக்கிறது.
ஆனால் சில படங்கள் மட்டுமே ஜொலிக்கிறது. பல படங்கள் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தாலும் தியேட்டரில் பார்க்கும்போது ரசிகர்களை ஈர்க்கவில்லை என்பதே உண்மை.
இதற்கு முக்கிய காரணம் இரண்டாம் பாதியின் சொதப்பல் தான். எல்லா படங்களும் அப்படி இல்லை என்றாலும் சில படங்கள் இப்படி ஒரு விமர்சனத்தை பெற்று வருகிறது.
நேற்று வெளியான ரெட்ரோ படத்திற்கு கூட இந்த விமர்சனம் தான் வந்து கொண்டிருக்கிறது. இதற்கு என்ன காரணம் என்பதை பார்ப்போம்.
தமிழ் சினிமாவும் இரண்டாம் பாதியும்
முதல் காரணம் படத்தின் இடைவேளை காட்சி அதை புல்லரிக்கும் வகையில் கொடுத்து ஆடியன்ஸை கவர வேண்டும் என்பதற்காக பெரிதும் மெனக்கிடுகின்றனர்.
ஆனால் அதன் பிறகு திரைக்கதையில் தள்ளாட்டம் தெரிகிறது. இரண்டாவது படத்தின் நீளம். 2 1/2 மணி நேரம் படத்தை மூன்று மணி நேரம் தாண்டி ஓட்டுகின்றனர்.
இது பார்வையாளர்களை சலிப்படைய வைக்கிறது. மூன்றாவதாக திரைக்கதை சொதப்பல். ஆரம்பத்தில் நன்றாக தொடங்கி முடிவில் எப்படி முடிப்பது என்று தெரியாமல் பல இயக்குனர்கள் திணறி விடுகின்றனர்.
நான்காவதாக காமெடி மற்றும் இசைக்கு பெரும் பஞ்சமாக இருக்கிறது. அதனால் தான் 12 வருடங்களுக்கு முன்பு எடுக்கப்பட்ட மதகஜராஜா தியேட்டர்களை கலக்கியது.
இதிலிருந்தே தெரிந்திருக்கும் இப்போதைய இயக்குனர்கள் எதற்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை என. ஐந்தாவதாக ஓவர் ஹீரோயிசம். இதுவும் பார்வையாளர்களை சலிப்படைய வைத்து விடுகிறது.
அதிலும் இயக்குனர்கள் இதை மட்டுமே மனதில் வைத்துக் கொண்டு முழு படத்தையும் கொண்டு செல்கின்றனர். படத்துல பில்டப்பா இல்ல பில்டப் தான் படமா என கேட்க வைத்து விடுகிறது சில படங்கள்.
ஆறாவதாக பான் இந்தியா ஆர்வம் அதிகரித்து விட்டது. 1000 கோடி பட்ஜெட் என முடிவு செய்து படத்தை எடுக்கும்போது ஒரிஜினாலிட்டி குறைகிறது.
ஏழாவதாக பார்வையாளர்களின் மன ஓட்டத்தை புரிந்து கொண்டு வரும் படங்கள் குறைவு தான். அதேபோல் பிரிமியர் ஷோ பார்த்துவிட்டு சில நெகட்டிவ் விமர்சனங்களை பரப்புவதும் சில படங்களை தோல்வி அடைய வைத்து விடுகிறது.
அதில் பொய்யாக பரவும் கமெண்டுகள் தான் அதிகம். இதில் சோசியல் மீடியாவுக்கு பெரும் பங்கு இருக்கிறது. இப்படியாக ஒரு படம் ஆடியன்ஸை முழுமையாக திருப்தி அடைய வைக்க தவறுகிறது.