நந்தினி விஷயத்தில் குழம்பிய சூர்யாவின் அப்பா.. ஓவராக ஆடும் அர்ச்சனா

Moondru Mudichu Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற மூன்று முடிச்சு சீரியலில், சூர்யாவையும் நந்தினியையும் ஒன்று சேர விடக்கூடாது நந்தினியை வீட்டை விட்டு விரட்ட வேண்டும் என்று எல்லோரும் கங்கணம் கட்டிக்கொண்டு அலைகிறார்கள். ஆனால் நந்தினிக்கு சப்போர்ட்டாக சூர்யா மற்றும் அருணாச்சலம் எல்லா உதவிகளையும் செய்து வந்தார்.

ஆனால் தற்போது சூர்யாவின் அப்பா நந்தினியை சந்தேகப்படும் விதமாக சூழ்நிலை அமைந்து விட்டது. அதனால் இதை எதிர்பார்க்காத சூர்யா உச்சகட்ட கோபத்துடன் அருணாச்சலத்திடம் சண்டை போடுகிறார். ஆனால் இதற்கு பின்னர் இருந்து எல்லா சூழ்ச்சியும் செய்த அர்ச்சனா சந்தோஷமாக இருக்கிறார்.

இதற்கெல்லாம் காரணமாக இருக்கும் ரேணுகாவின் பற்றிய உண்மையை சூர்யா அல்லது நந்தினி கண்டுபிடித்தால் மட்டும் தான் நந்தினி வாழ்க்கையில் ஒரு விடிவு காலம் பிறக்கும். ரேணுகா வேலைக்காரி போல் வீட்டில் நடக்கும் எல்லா விஷயத்தையும் அர்ச்சனாவிடம் போட்டு கொடுக்க அதற்கேற்ற மாதிரி அர்ச்சனா பிளான் பண்ணி குடும்பத்திற்குள் குளறுபடியை ஏற்படுத்துகிறார்.

இது தெரியாத நந்தினி, ரேணுகாவிற்கு ஓவராக இடம் கொடுத்து கண்முடித்தனமாக நம்புகிறார். அதனால் தான் தற்போது நந்தினி மீது ஒரு பழி விழுந்திருக்கிறது. அது மட்டுமல்ல இதுவரை நந்தினிக்கு அதிக அளவில் சப்போர்ட் கொடுத்து உதவி செய்தது அருணாச்சலம் தான். ஆனால் அவரே நந்தினியை நம்பாமல் சுந்தரவல்லி திட்டும் பொழுது வேடிக்கை பார்த்தது நந்தினிக்கு மிகப்பெரிய ஏமாற்றமாக போய்விட்டது.

ஆனால் யார் என்ன சொன்னாலும் நந்தினி மீது அதிக அளவில் நம்பிக்கை வைத்து சூர்யா சப்போட்டாக பேசியது ஆறுதலாக நந்தினிக்கு இருந்திருக்கும். இதன் பிறகு சூர்யா மற்றும் நந்தினிக்கு இடையில் இருக்கும் காதல் வெளிவந்து இருவரும் மனம் ஒத்தும் தம்பதிகளாக மாறி சந்தோசமாக வாழ்வார்கள். இதுதான் அர்ச்சனாவுக்கு கிடைக்கப் போகும் மிகப்பெரிய தண்டனையாக இருக்கும்.