கூட இருந்தே வெட்டிய குழி.. விஜய்யை ரோபோனு விமர்சித்த பிரபலம்

Vijay : சினிமாவில் நடிகராக இருந்து அரசியலில் வெற்றி கண்டவர்கள் பலர் இருக்கின்றனர். அவ்வாறு எம்ஜிஆர், ஜெயலலிதா போன்ற பிரபலங்களை தொடர்ந்து கமல், ரஜினி, விஜயகாந்த் போன்றோர் அரசியலில் இறங்க ஆர்வம் காட்டினர்.

ஆனால் ரஜினி இதிலிருந்து பின்வாங்கி விட்டார். கமல், விஜயகாந்த் போன்றோர் அரசியலில் களம் இறங்கினாலும் பெரிய அளவில் சோபிக்கவில்லை. விஜய் கடந்த ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி இருக்கிறார்.

தற்போது பொதுக்கூட்டங்களும் நடத்தி வருகிறார். இந்த சூழலில் பல மேடைகளில் நேரடியாகவே திமுகவுக்கு போட்டி தவெக தான் என்று கடுமையாகவும் பேசி வருகிறார். ஆனால் விஜய்யை ரோபோ என்று விமர்சித்துள்ளார் அவரது விசுவாசி.

விஜய்யை ரோபோன்னு கூறிய பிரபலம்

தயாரிப்பாளர் மற்றும் விஜய்யின் முன்னாள் பிஆர்ஓ பிடி செல்வகுமார் பேட்டி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர் ஒரு ரோபோ எப்படி பெரிய ஹீரோவா ஆகி அதன் பிறகு அரசியலில் முதலமைச்சர் ஆகிறார் என்ற ஒரு படம் பண்ண போகிறேன் என்று கூறியிருக்கிறார்.

இவர் ரோபோ என மறைமுகமாக விஜய்யை தாக்கி தான் பேசி உள்ளார் என்பது அப்பட்டமாக தெரிகிறதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சினிமா என்பது விஜய்க்கு கைவந்த கலை தான். ஆனால் அரசியல் அவருக்கு புதிது.

ஆனாலும் அரசியலில் பழம் தின்று கொட்டை போட்டவர்கள் பலர் இருக்கின்றனர். அவர்களிடம் ஆலோசனை எல்லாம் நடத்தி விட்டு தான் அரசியலில் இறங்கி இருக்கிறார். அதுவும் சினிமாவை விட்டுவிட்டு வருகிறார் என்றால் கண்டிப்பாக வருகின்ற சட்டமன்ற தேர்தலில் ஒரு பெரிய மாற்றத்தை கொடுப்பார் என்பதில் சந்தேகம் இல்லை.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →