Dhruv Vikram: விக்ரமின் வாரிசான துருவ் விக்ரம் தோல்வி படங்களை கொடுத்து வந்த நிலையில் மாரி செல்வராஜை நம்பி இறங்கி இருக்கிறார். விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தின் ரிலீஸ் தேதி இன்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
மாரி செல்வராஜ் இதற்கு முன்னதாக கர்ணன், பரியேறும் பெருமாள், மாமன்னன் போன்ற வெற்றி படங்களை கொடுத்திருக்கிறார். ஆகையால் தனது மகனை விக்ரம் மாரி செல்வராஜ் இடம் ஒப்படைத்தார்.
சில வருடம் பயிற்சி எடுத்த பின் மாரி செல்வராஜ் படத்தில் துருவ் விக்ரம் நடிக்க தொடங்கினார். இதில் ரஜீஷா விஜயன், லால், பசுபதி, கலையரசன் பிரபலங்கள் நடிக்கின்றனர். மேலும் இந்த படத்தை தனது நீலம் ப்ரொடக்ஷன் மூலம் பா. ரஞ்சித் தயாரிக்கிறார்.
பைசன் ரிலீஸ் தேதி அறிவிப்பு
கபடி விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படம் தீபாவளி பண்டிகைக்கு வெளியாக இருக்கிறது. அதேபோல் சூர்யாவின் 45 படமும் தீபாவளி ரிலீஸ் ஆகியுள்ளது. ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா தனது 45 வது படத்தின் நடித்து வருகிறார்.
சூர்யா நடிப்பில் வெளியான ரெட்ரோ படம் ஓரளவு நல்ல வரவேற்பை பெற்று வசூலும் பெற்று வருகிறது. கங்குவா படம் கொடுத்த தோல்வியை இந்த படம் சற்று தனித்து இருக்கிறது. இதை ஆண்டு தீபாவளிக்கு சூர்யாவின் அடுத்த படம் வர இருக்கிறது.
ஆகையால் ரசிகர்கள் பெரிய எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். மேலும் சூர்யா மற்றும் துருவ் விக்ரம் மோதிக் கொள்வதால் யாருக்கு வெற்றி என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.