பாண்டியன் வீட்டிற்கு ஒன்றாக வரும் கதிர் ராஜி.. சக்திவேல் விரித்த வலையில் சிக்கிய மீனா

Pandian Stores 2 Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், அரசிக்காக பிரார்த்தனை முடித்துவிட்டு கோமதி மீனா செந்தில் அனைவரும் காரில் வந்து விட்டார்கள். ஆனால் ராஜி கதிர்காக டான்ஸ் ஆடி ஜெயித்த பைக்கில் பாண்டியன் வீட்டிற்கு ஒன்றாக வரப்போகிறார்கள். இதுதான் இவர்களுக்கான நேரம் என்பதற்கு ஏற்ப ஒருவரை ஒருவர் பேசி நன்றாக புரிந்து கொள்ளப் போகிறார்கள்.

அந்த வகையில் கதிர் ஆசைப்பட்ட மாதிரி பைக்கை ஜெயித்து காட்டிய ராஜி அடுத்ததாக போலீஸ் ஆபீசராகவும் ஜெயிக்க போகிறார். இதற்கிடையில் மீனா சக்திவேல் ஏற்கனவே முட்டி கொண்டார்கள். அதனால் சக்திவேல், மீனாவின் வேலைக்கு ஆப்பு வைக்கும் விதமாக சூழ்ச்சி பண்ணி விட்டார்.

அதாவது தெரிந்த நபர் மூலம் மீனா வேலை பார்க்கும் இடத்திற்கு சென்று மீனாவிடம் லஞ்சம் கொடுப்பது போல் சூழ்ச்சி பண்ணுகிறார். அந்த சூழ்ச்சியில் மீனாவும் சிக்கிக்கொண்டு லஞ்சம் வாங்குன குற்றத்திற்காக மீனா மீது வீண்பழி சுமந்து விட்டது.

இதுதான் சான்ஸ் என்று சக்திவேலும் என்னிடமும் லஞ்சம் கேட்டாங்க, நான் கொடுக்க மாட்டேன் என்று சொன்னதும் என் கண்ணு முன்னாடியே என் கடையை இடிச்சிட்டாங்க என்று சொல்கிறார்.

உடனே பத்திரிகையாளர்கள் அனைவரும் சேர்ந்து மீனாவின் சந்தர்ப்பத்திற்கு ஏற்ற மாதிரி லஞ்சம் வாங்கினார் என்று போட்டு விடுகிறார்கள். இந்த விஷயத்தை கேள்வி பட்ட பாண்டியன் குடும்பத்தில் இருப்பவர்கள் மீனாவை சந்தேகப்படாமல் மீனா மீது இருக்கும் நியாயத்திற்காக கை கொடுக்கப் போகிறார்கள்.

அந்த வகையில் இந்த சூழ்ச்சிக்கு பின்னாடி சக்திவேல் தான் இருக்கிறார் என்பதையும் கண்டுபிடித்து மீனா மீது எந்த தவறும் இல்லை என்பதை நிரூபித்துக் காட்டி விடுவார்கள். அடுத்ததாக அரசின் நிச்சயதார்த்தம் மற்றும் கல்யாண வேலைகள் நடைபெற உள்ளது. இதில் குளறுபடி பண்ணும் விதமாக சுகன்யா ஏதாவது சதி செய்ய வாய்ப்பு இருக்கிறது. ஆனால் யார் என்ன சூழ்ச்சி பண்ணாலும் அரசிக்கு சதீஷ் தான் தாலி கட்டுவார்.