Veera Serial: ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வருகின்ற வீரா சீரியலில், நல்லா இருந்த குடும்பத்திற்குள் ஆமை புகுந்த மாதிரி விஜி ராமச்சந்திரன் குடும்பத்திற்குள் நுழைந்து ஒவ்வொருவருடைய நிம்மதியையும் கெடுத்துக் கொண்டு வருகிறார். விஜி கேரக்டர் பற்றி தெரியாமல் வள்ளியும் ராமச்சந்திரனும் கண்மூடித்தனமாக விஜியை நம்புகிறார்கள்.
அதனால் தான் கார்த்திக் மீது வீண்பழி விஜி போட்டதும் எல்லோரும் அதை நம்பிக் கொண்டு கார்த்திக்கை விஜி கழுத்தில் தாலி கட்ட வைத்து விட்டார்கள். ஆனால் கார்த்திக் சொன்னதில் உண்மை இருக்கு என்று புரிந்து கொண்ட மாறன், பிருந்தா கழுத்தில் தாலி கட்டுவதற்கு உதவி பண்ணினார்.
தற்போது பிருந்தாவும் விஜியும் கார்த்திக்கின் மனைவியாக ராமச்சந்திரன் குடும்பத்தில் இருக்கிறார்கள். ஆனாலும் இந்த விஜி, பிருந்தாவை காலி பண்ண வேண்டும் என்று கொலை செய்யும் முயற்சியில் தண்ணீர் தொட்டிக்குள் போட்டு விடுகிறார். இதற்கிடையில் சாமியார் பிருந்தா தான் கார்த்திக்கின் மனைவி என்பதை சொல்லிட்டு போனதிலிருந்து வீராவுக்கு சந்தேகம் வந்துவிட்டது.
அந்த வகையில் குழப்பத்தில் இருக்கும் வீரா, ரோட்டில் போகும் கண்மணியின் அத்தையை சந்திக்கிறார். அப்பொழுது வீரா அவர்களிடம் அக்கரையாகவும் பாசத்தைக் காட்டியும் பேசுகிறார். உடனே நீங்கள் கண்மணி பேச்சைக் கேட்டு எதையும் பண்ணாதீர்கள். கண்மணி மீது நிறைய தவறு இருக்கிறது என்று வீரா, அத்தையிடம் சொல்கிறார்.
அதற்கு அந்த அத்தை கண்மணி சொல்லி நான் கோர்ட்டுக்கு வரவில்லை, என்னை வரவழைத்தது வேறு ஒரு பொண்ணு என்று சொல்கிறார். உடனே வீரா அந்த பொண்ணு யார் என்று கேட்ட பொழுது விஜி தான், அவள் உங்க குடும்பத்தில் இருப்பவர்களை நிம்மதியாக இருக்க விட மாட்டாள். கொஞ்சம் நீங்கள் அவரிடம் ஜாக்கிரதையாக இருங்கள் என்று சொல்லிட்டு போய் விடுகிறார்.
அப்பொழுது எல்லா பிரச்சனைக்கும் விஜி தான் காரணம் என்று வீரா புரிந்து கொள்வார். அதன்படி விஜியின் ரகசியங்கள் என்ன, ராமச்சந்திரன் குடும்பத்தை ஏன் பழிவாங்க வேண்டும் என்ற ரகசியங்கள் எல்லாத்தையும் வீரா மாறனுடன் சேர்ந்து கண்டுபிடிக்க போகிறார். அப்படி விஜி பற்றிய விஷயங்கள் வெளிவந்து விட்டால் விஜியை வீட்டை விட்டு துரத்தி பிருந்தா கார்த்திக்கின் மனைவி என்ற அந்தஸ்தை பெற்று விடுவார்.
அதன்படி பழைய மாதிரி எல்லோரும் ஒற்றுமையாக சந்தோஷமாக இருப்பார்கள். ஆனால் அதற்குள் விஜி, வள்ளி மனசை மாற்றும் விதமாக சில விஷயங்களை சொல்லி வள்ளியையே அந்த குடும்பத்திற்கு எதிராக திருப்புகிறார். இதில் இருந்து வீரா எல்லோரையும் எப்படி காப்பாற்றப் போகிறார் என்பதுதான் விறுவிறுப்பான கதையாக தொடர போகிறது.